உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கட்சியால் 50,000 ஓட்டுகளை அள்ள முடியுமா?

சீமான் கட்சியால் 50,000 ஓட்டுகளை அள்ள முடியுமா?

''கான்ட்ராக்டர்கள் எல்லாம் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''அவங்களுக்கு என்ன வே பிரச்னை...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''தமிழகம் முழுக்க, கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறா ஏறிடுத்து... ஆனாலும், அரசு துறை பணிகளுக்கு, பழைய விலைவாசி அடிப்படையில் தான், டெண்டர் தொகையை நிர்ணயிக்கறா ஓய்...''இதனால, கான்ட்ராக்டர்கள் யாரும் டெண்டர் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டேங்கறா... உதாரணமா, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், 32 கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் அழைச்சிருக்கா ஓய்... ''ஆன்லைன்லயே டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம்... ஆனா, தமிழகம் முழுக்க இருந்து ஒருத்தர் கூட விண்ணப்பிக்கல... 'பழைய ரேட்ல பணியை செய்து, நஷ்டப்பட முடியுமா'ன்னு கான்ட்ராக்டர்கள் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சீரமைப்பு பணிகள் தீவிரமா நடக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''விடுதலை சிறுத்தைகள் கட்சியில, 144 மாவட்டச் செயலர்கள் இருந்தாங்க... அந்த பதவிகளை எல்லாம் கலைச்சுட்டு, 234 தொகுதிகளுக்கும் தலா ஒருத்தர் வீதம், 234 மாவட்டச் செயலர்களை நியமிக்க இருக்காங்க...''ஏற்கனவே, சட்டசபை தொகுதிக்கு தலா ஒரு மேலிட பொறுப்பாளரை நியமிச்சிருக்காங்க... அந்த பொறுப்பாளர்கள், தொகுதியில் கட்சிப் பணிகளை சுறுசுறுப்பா செய்றவங்க யார் யார், சரியா செயல்படாதவங்க யார் யார்னு பட்டியல் எடுத்து, தலைமையிடம் குடுக்கிறாங்க...''இந்த பட்டியலை, தலைமையில இருக்கிற 10 பேர் குழு ஆய்வு செய்து, அதுல இருந்து தகுதியான ஒருத்தரை மாவட்டச் செயலரா தேர்வு செய்வாங்க...''இப்ப, கட்சியின் பொதுச் செயலர்களா ரவிகுமார் எம்.பி.,யும், சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ.,வும் இருக்காங்க... துணை பொதுச் செயலரா இருக்கிற வன்னியரசுக்கு பொதுச் செயலர் புரமோஷன் தரப் போறாங்க... ''இப்ப, துணை பொதுச் செயலர்களா இருக்கிற சிலரை, உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு நியமிச்சிட்டு, கட்சிக்கு நீண்டகாலமா உழைச்சிட்டு இருக்கிற சிலருக்கு துணை பொதுச் செயலர் பதவி தரவும் திருமாவளவன் முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''டிபாசிட் வாங்கிடணும்னு முடிவு பண்ணியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி. ''ஈரோடு கிழக்கு தகவலா பா...'' என்றார், அன்வர்பாய். ''ஆமா... அங்க முக்கிய கட்சிகள் எல்லாம் ஒதுங்கிட்டதால, தி.மு.க.,வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டியே நடக்கு... ஆளுங்கட்சி வெற்றி உறுதின்னாலும், 'நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கியை உயர்த்தணும்'னு, கட்சி நிர்வாகிகளிடம் சீமான் சொல்லியிருக்காரு வே...''கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமியை வேட்பாளரா நிறுத்திட்டதால, அந்த சமுதாயத்தினர் ஓட்டுகளை அள்ளிடலாம்... அதுவும் இல்லாம, அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., போன்ற கட்சியினரின் ஓட்டுகளும் தங்களுக்கு கிடைக்கும்னு சீமான் நினைக்காரு வே...''கடந்த இடைத்தேர்தல்ல இளங்கோவன் ஜெயிச்சப்ப, சீமான் கட்சி 10,000 ஓட்டுகள் வாங்குச்சு... இந்த முறை பிரதான கட்சிகள் இல்லாததால, 50,000 ஓட்டுகளுக்கு மேல வாங்கி, டிபாசிட்டையும் தக்கவச்சுக்கணும்னு திட்டமிட்டு, தேர்தல் பணிகளை சீமான் செய்யுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அன்பே சிவம்
ஜன 18, 2025 03:08

1). இரண்டு கட்சிகளே உள்ளதால் அதாவது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என்பதால் chance உள்ளது. 2).உண்மையில் சீமான் ஒரு தைரியமான நபர்தான். 3). திராவிட வண்டவாளங்களை அவரை விட்டால் யாராலும் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாது. 4). Erodeகாரர்கள் வில்லங்கமான நபர்கள். எதை வேண்டுானாலும் செய்யலாம். 5). சீமான் தீவிர பிரச்சாரம் செய்தால் எதுவும் நடைபெறலாம். வாழ்த்துக்கள்.


venugopal s
ஜன 17, 2025 17:29

நிச்சயமாக கிடைக்கும். நாதக ஆதரவாளர்கள் ஓட்டுக்கள் மட்டும் அல்லாமல் திமுகவை எதிர்க்கும் அதிமுக,பாஜக, மற்ற கட்சிகளின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது!


S Srinivasan
ஜன 17, 2025 14:14

l wish erode people should register their opposition to present govt by voting for nasm thamizhar katchi, l request erode people to support that lady candidate please


Svs Yaadum oore
ஜன 17, 2025 14:07

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது எவன் ??.....கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற மொக்கை .....


வேணு
ஜன 17, 2025 13:37

DMK ஐ எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு மற்ற போட்டியிடாத கட்சிகள் ஆதரவு தெரிவித்தால்தான் அவர்களின் உண்மை முகம் தெரியும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 12:30

ஈரோடில் மொத்தமே 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் தான். பெரிய கட்சிகள் எதுவும் போட்டியிடாததால், உண்மையான கட்சிக்காரன் என்றால், சுமார் 75 - 80 ஆயிரம் பேர் வாக்குச்சாவடிகள் பக்கமே வர மாட்டார்கள். எந்த தேர்தல் வந்தாலும் ஓட்டே போடாத கூட்டம் ஒரு 10 ஆயிரம், வெளி ஊர்களில் வேலையில் இருப்பவர்கள், உடம்பு சரியில்லாதவர்கள், அப்படி இப்படி என்று ஒரு 10 ஆயிரம் பேர் ஓட்டு போட வரமுடியாது. அப்புறம் என்ன? இதெல்லாம் போக , இருப்பதே 1 லட்சம் ஓட்டுகள். இதிலும் நோட்டா வில் போடற அறிவிலிகள் கொஞ்சம் பேர் இருப்பாங்க. ஆகமொத்தம் சொதப்பலான மொக்க தேர்தல்.


Svs Yaadum oore
ஜன 17, 2025 11:24

ஒருத்தன் ஆட்சியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ...இன்னொருத்தன் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது நாம் தமிழர் ....இவனுங்கதான் தமிழனுங்களாம் .. இவர்களுக்கு மானம் ரோஷம் உள்ள எந்த தமிழனும் ஆதரவு கொடுக்க மாட்டான் வோட்டு போட மாட்டான் ....


Velan Iyengaar
ஜன 17, 2025 10:02

வாக்கு வாங்குவாரா???


Velan Iyengaar
ஜன 17, 2025 09:59

விஜயலட்சுமி வந்து பிரச்சாரம் செய்தா கூட நடக்குமா என்பது சந்தேகம் தான் ....


angbu ganesh
ஜன 17, 2025 09:46

நான் சீமானின் தொண்டன் இல்ல அவர் கட்சியிலும் இல்ல ஆனா நாம் தமிழர் கட்சி ஜெயிக்கணும் அதன் என்னை போன்ற இந்துக்களின் ஆசை தீயமுக்கவுக்கு ஒரு சாவு மணி அவர் மூலமா அடிக்கனுனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை