உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக கனடா இருக்கும். அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்களாக இருப்பார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்கு படிக்க சென்றனர். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும். இதற்கு, உலகத் தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b8ihevvk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது.இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 20,900 ஆக இருந்து ஆகஸ்ட் 2025 இல் 4,515 ஆகக் குறைந்துள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ''கனடா குடியேற்ற விதிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
நவ 04, 2025 17:14

இந்த வெளி நாட்டு மோகம் என்பது வெறும் டப்பா அடிக்கத்தான் லாயக்கு???என் பைய்யன் தெரியுமா எம் எஸ், எம் பி ஏ பண்ரான் அமெரிக்காவில், கனடாவில்......... இது பெருமையாம்???அதே பைய்யன் இந்தியாவில் படித்தால் சொல்வது ஏதோ என் பைய்யன் இன்னும் படிக்கிறான் என்று சொல்வது???இந்த மனநிலை மாறினால் தான் இந்த வெளிநாட்டு மோகம் குறையும்????


Gokul Krishnan
நவ 04, 2025 16:03

கூட்டம் அங்கும் பொது இடங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போட்டதும் ஒரு காரணம்


Santhakumar Srinivasalu
நவ 04, 2025 12:41

ஏன் வெளிநாட்டு கல்விக்கு சமமாக இந்தியாவின் நிலையை உயர்த்த முடியாதா?


KavikumarRam
நவ 04, 2025 18:34

அதெல்லாம் நிறைவா இந்தியாவிலேயே இருக்கு நீங்க வீம்புக்கு வெளிநாட்டுக்கு படிக்க போனா அவன் இந்த மாதிரி பந்தா பண்ணத்தான் செய்வான்.


தத்வமசி
நவ 04, 2025 11:20

ஒரு பக்கம் வெளிநாட்டு மோகம் என்றாலும் செல்வதில் தவறில்லை. இந்தியாவில் அந்த வசதிகளும் வாய்ப்புகளும் கிடைத்தால் செல்வது குறையும். சரி, கனடாவில் இப்போது உள்ளவர்கள் கனடாவின் உண்மையான உள்ளூர் வாசிகளா ? உள்நாட்டில் இருந்தவர்களை அடக்கி வெளியில் இருந்து வந்தவர்கள் செய்யும் ஆட்சிதான் இப்போது அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய நாடுகளில் நடை பெறுகிறது.


Ramesh Sargam
நவ 04, 2025 10:44

நமது மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே வெளிநாட்டு மோகம் குறைய வேண்டும். தாய் நாட்டிலேயே சாதிக்க முயலவேண்டும்.


கனேஷ்
நவ 04, 2025 10:38

இங்கே என்ன இல்லை? ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறீங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை