உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா உடனான உறவு படிப்படியாக வளர்கிறது: கனடா அமைச்சர் பேட்டி

இந்தியா உடனான உறவு படிப்படியாக வளர்கிறது: கனடா அமைச்சர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: இந்தியா - கனடா இடையிலான உறவு படிப்படியாக வளர்ந்து வருகிறது என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பாக இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் இரு நாட்டு உறவு சீர்குலைந்தது. தூதரக அதிகாரிகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டனர்.கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றதும் நிலைமை மாறியுள்ளது. தூதர்கள் நியமிக்கப்பட்டனர். கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் டில்லி வந்து சென்றார். அடுத்தாண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வர உள்ளார்.இந்நிலையில் அனிதா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் இரு நாட்டு உறவு படிப்படியாக வளர்த்து வருகிறது.முதல் நடவடிக்கையாக இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.அடுத்ததாக இரு நாடுகளின் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.மூன்றாவதாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் குறித்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஜி20 மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்