உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க வழங்கப்பட்ட அனுமதியைஉடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட 9ம் சுற்று ஏலத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பா.ம.க., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sadananthan Ck
ஏப் 28, 2025 12:36

ராம்தாஸ் போன்றவர்களை சென்னை போன்ற நகரத்தில் வாழ அனுமதி அளிக்கக் கூடாது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் இவர்களை குடியமர்த்த வேண்டும். இவரைப் போன்றவர்கள் எல்லாம் நாட்டின் சாபக்கேடு


panneer selvam
ஏப் 27, 2025 22:47

Everyone knows that Dr. Ramdass is senile due to aging . He may not aware UK is extracting oil from North sea for the last 20 years and no one has found any environment problem . India is has deep sea oil wells in Bombay high seas for the last 15 years and no fishermen had objected .


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 27, 2025 21:05

ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் - இதுபோன்ற அரசியல் கருத்துக்களின் பின்னால் இருப்பது பிரிவினை எண்ணம். தமிழக எல்லைக்குள் இருக்கும் கணிமவளங்களை இந்திய அரசு பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம். தமிழகம் தனி நாடாக உருவாகியபின் சுயலாபத்திற்காக மட்டும் பயன்படுத்தும் எண்ணம். அப்போது இவர்கள் இப்போது சொல்லும் அதே காரணங்கள் குப்பைக் கூடையில் வீசப்படும். பாமக, திமுக, நாதக இன்னபிற அல்லக்கை கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான் - பிரிவினை.


sankaranarayanan
ஏப் 27, 2025 21:01

ஏனைய்யா இந்த வயதில் ஏதாவது பிதற்றிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. இனி எந்த கட்சியிலிருந்தும் பெட்டியே வாராது .அதை நம்பி நீங்க தைலாபுரத்தில் முகாமிட்டு கோட்டை கட்ட வேண்டாம் வயதான காலத்தில் தைலாபுரத்திலேயே கிருஷ்ணா ராமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாலாவது செய்த பாவங்கள் தீர வாய்ப்பு உண்டு


Sampath Kumar
ஏப் 27, 2025 18:30

உங்க மகன் அனல் மின் நிலையத்தை மூடு என்கிறான் நீங்க ஆயில் ஏடுக்காதே என்கிறீர்கள் அப்போ அந்த இரண்டையும் தைல புறம் தோட்டத்தில் ஏடுகள்ம சொல்லுங்க வைத்தியரே


D Natarajan
ஏப் 27, 2025 17:37

இந்த அறிவு ஜீவி மாட்டு வண்டியில் போவாரானால் , இதைப்பற்றி யோசிக்கலாம்.


உண்மை கசக்கும்
ஏப் 27, 2025 16:23

ஒன்றாம் நம்பர் அறிவிலியே, உங்கள் வீட்டில் எரிவாயுவா? வரட்டியா? உனக்கு மட்டும் எரிவாயு வேண்டும்..


மனி
ஏப் 27, 2025 15:42

எந்த திட்டமும் ஆகாது ஆனால் எல்லா வசதியும் வேணும் இப்படியும் சில அரசியல் புத்திசாலிக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை