உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வீட்டு வசதி வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தவணை தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். தவணை தவறியவர்களுக்கு அபராத வட்டி உள்ளிட்ட கூடுதல் தொகைகள் விதிக்கப்படும். இதனால், நிலுவைத் தொகை அதிகரித்ததால், வாரியத்துக்கு வர வேண்டிய வருவாய் நிலுவையும் பல மடங்காக உயர்ந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, சலுகைகளுடன் நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்க, வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், தமிழகம் முழுதும், 1,500க்கு மேற்பட்டோர் தவணை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது புதிதாக செயல்படுத்தும் திட்டங்களில், தவணை முறை இல்லை. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், தவணை முறையில் வீடு, மனை பெற்றவர்கள் நிலுவை வைத்துள்ளனர். பெரும்பாலானோர், ஓரிரு தவணைகளை மட்டுமே செலுத்தியவர்களாக உள்ளனர். இதனால், அவர்களுக்கான வீடு, மனை ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வாரியத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இருப்பினும், இத்தகையோருக்கு கடைசியாக, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வாரியம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கோட்ட அலுவலகங்கள் வாயிலாக வெளியிடப்படும். அதன் பின்னும் நிலுவை வசூலாகவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த வீடு, மனைகள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
அக் 07, 2024 11:09

தகுதியுள்ள மக்களுக்கு தள்ளுபடி இதில் கிடையாதா? முழுப் பணமும் கட்டியவர்களுக்கே வீட்டுப் பத்திரம் தராமல் இழுத்தடிக்கும் வாரியம் என்கிறார்கள்.


Neutrallite
அக் 07, 2024 10:10

வாரியத்துக்கு வர வேண்டிய பணமா...அதிகாரிகளுக்கு வர வேண்டியதா?


raja
அக் 07, 2024 07:44

தஞ்சை அருகே வல்லத்தில் வீடு கட்டி பல வருடங்கள் ஆகி யாருக்கும் ஒதுக்க படாமல் இப்போது அந்த வீடுகள் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து பல்லித்து கொண்டு இருக்கிறது...அதனால் பயனாளர்கள் யாரும் அதை வாங்க முன்வரவில்லை என்பதே உண்மை ..


Kasimani Baskaran
அக் 07, 2024 05:20

ஆனால் ஜாபர் சேட் போன்றோருக்கு வீடு ஒதுக்குவோம். குறைந்த வருமானம் பெறுவோர் பொருளாதார சிக்கல் இல்லாதோர் எத்தனை பேரை இவர்களால் காட்டமுடியும்? ஏழைகளுக்கு ஒதுக்குவதை விட்டுவிட்டு பணக்காரர்களுக்குதான் வீடு கிடைக்கிறது. எதிலும் தலைகீழாக செயல்படும் தமிழகம் என்ற பெருமை வேறு.


முக்கிய வீடியோ