உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ரசாயனம்: உணவு பாதுகாப்பு துறை உறுதி

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ரசாயனம்: உணவு பாதுகாப்பு துறை உறுதி

சென்னை: சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சு மிட்டாய்களில், புற்றுநோயை ஏற்படுத்தும், 'ரோட்டமின் பி' ரசாயனம் கலந்திருப்பது, உணவு பாதுகாப்பு துறை சோதனையில் உறுதியாகி உள்ளது.புதுச்சேரி, காரைக்காலில், அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலந்திருப்பதாக எச்சரித்தனர்.அதைதொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில், பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களிடம் இருந்து, 1,000 பாக்கெட் பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விற்பனைக்கு வைத்திருந்த பஞ்சு மிட்டாய்களின் மாதிரிகளை சேகரித்து, உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய, 'ரோட்டமின் பி' ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துஉள்ளது.அத்துடன், ஆய்வில் கண்டுபிடிக்க முடியாத சில ரசாயன வகைகளையும், 'பஞ்சு மிட்டாய்'களில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

- பி.சதீஷ்குமார் நியமன அலுவலர், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

தயாரிக்கப்பட்டது

பஞ்சுமிட்டாய் தரம் குறித்த ஆய்வில், 'ரோட்டமின் பி' ரசாயனம் மற்றும் கண்டுபிடிக்க முடியாத ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துஉள்ளது. எனவே, பஞ்சு மிட்டாய்க்கு எதிரான சோதனையை தீவிரப்படுத்த உள்ளோம். இவை, ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த இடம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிக வண்ண நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டாம். விற்பனையில் ஈடுபடுவோர் மீது, 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A1Suresh
பிப் 17, 2024 13:00

முதலில் டாஸ்மாக் நிறுத்துங்கள். பல்லாயிரம் இளம் விதவைகள் உருவாக்கப்படுகின்றனர்


இறைவி
பிப் 17, 2024 12:57

பஞ்சு மிட்டாய் ஜீனியை (அஸ்கா சர்கரையை) சூடு படுத்தி (caramalise) ஒரு குப்பியில் வைத்து வேகமாக சுற்றும்போது அந்த ஜீனி பஞ்சு போல் வருவதுதான் பஞ்சு மிட்டாய். அது வெறும் ஜீனியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஏனென்றால் ஸ்வீட் கடைகளிலும் அல்வாவிற்கு நிறம் கொடுக்க caramalise செய்வார்கள். பிரச்சனை பஞ்சு மிட்டாய்க்கு குழந்தைகளை ஈர்க்கக் கூடிய நிறம் கொடுக்க செயற்கை நிறமிகளை (artificial colours) உபயோகப் படுத்தும் போதுதான். குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நிறமில்லாத பஞ்சு மிட்டாய் விற்க அரசு சோதனை செய்தபின் அனுமதி கொடுக்கலாம்.


theruvasagan
பிப் 17, 2024 11:51

டாஸ்மாக் சரக்கு உற்சாகம் தரக்கூடிய ஊட்டச்சத்து பானம். அதில் எவ்விதமான கெடுதலும் இல்லை. ஆகையால் அதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்படிக்கு விடியல் அரசு உணவு பாதுகாப்பு துறை.


Lion Drsekar
பிப் 17, 2024 11:42

பானு மிட்டாயை மட்டும் நிற்கவில்லை, அரசாங்கம் விற்கும் சாராயத்தில் அதைவிட கொடுமையான நச்சு இருக்கிறது அதையும் தரக்கட்டுப்பாடு ஆவண செய்யவேண்டும் . அதே போன்று இனிப்பு பலகாரங்களில் கலக்கப்படும் வண்ணம் , மற்றும் மாமிச உணவுகள் அனைத்திலும் கேசரி பௌடர் கலக்கப்படுகிறது . இதையும் தடுக்க முன்வந்தால் நல்லது . வந்தே மாதரம்


குமரி குருவி
பிப் 17, 2024 11:03

அழகான சுவையான பஞ்சுமிட்டாய்கள் இத்தனை ஆபத்து நிறைந்ததா...


ram
பிப் 17, 2024 10:45

சென்னையில் இது அதிகமா வட மாநிலத்தவர்கள் விற்கிறார்கள், இவர்களை அடிக்கடி பார்க்கலாம்.


ஆரூர் ரங்
பிப் 17, 2024 09:03

பாவம் பருத்தி விவசாயிகள். இனிமே???? பஞ்சு விற்பனை குறையுமா?


duruvasar
பிப் 17, 2024 08:42

பாமர மக்களுக்கு அடுத்தவர் எடுத்து சொன்னால்தான் விஷயங்கள் புரியும். படித்தவர்கள் விஷயங்களை படித்து புரிந்து கொள்வார்கள். இதில் நமது அதிகாரிகள் பாமரர் ஆகத்தான் இருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இந்த சோதனை மற்றும் நடவடிக்கை ஒரு வாரம் முன்பு நடந்ததாக செய்தி வந்தது.


Jysenn
பிப் 17, 2024 07:37

If you make any complaint about the quality of food or adulteration the officials right from DOs to FSOs will immensely benefit from such complaints not the consumers. They are waiting in anticipation of receiving complaints, just like private hospitals' ambulances are waiting on the roadside in expectation of accidents to happen, only to fill their pockets and some even make videos to impress or to fool the public but in actual practice they are murky operators. Food safety department can be regarded on par with RTO, registration departments when it comes to bribery. The officials are super actors in front of the camera even surpassing Sivaji but in reality they are disgustingly corrupt.


Ramesh Sargam
பிப் 17, 2024 07:09

இந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு டாஸ்மாக் சரக்கு தினம் தினம் குடிப்பதால், குடிப்பவன் குடல் கெட்டு மாள்வான், அவன் குடும்பம் சீரழியும் என்று தெரியாதா? மது விற்பனையை ஏன் தடுக்க தெரியவில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை