உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று தவெக அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அக்டோபர் 6ல் நடக்க உள்ள தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், தி.மு.க., சார்பில், இரண்டு தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nz3ov4br&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று (செப் 10) தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று தவெக அறிவித்துள்ளது. இருவரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள்.கட்சியினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தருமாறு என அக்கட்சி தலைவரும், முதல்வருமான விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அமாவாசை நாளான இன்று நல்ல நாள் என்பதால் காத்திருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.பிரத்யேக வீடியோ!இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

முருகன்
செப் 10, 2026 21:22

மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் இந்த இருவரையும் படுதோல்வி அடையவும் மேலும் இது போல் நடக்காமல் யாரும் யோசிக்க மல் இருக்கவும் மக்கள் தக்க பதிலடி ஓட்டு பதிவு வகையில் கொடுக்க வேண்டும்


dinesh p
செப் 10, 2026 18:44

These candidates shall be punished!


பிரேம் குமார்
செப் 10, 2026 18:38

அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது கட்சி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார்கள். ஆனால் அதில் இருவரை இடைத் தேர்தலில் அவர்களை ஆளும் கட்சி வேட்பாளர்களாக அறிவித்து மிக மோசமான முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இருவரும் ஒருவேளை தேர்வாகி விட்டால் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக ஆகும் எண்ணத்தில் பிற கட்சியை சேர்ந்த மேலும் பல உறுப்பினர்கள் தங்களது ராஜினாமாவை சமர்ப்பிக்க இது வழி வகுத்து விடும். எனவே தவெக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். இல்லையெனில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே இது குறித்த ஆணையத்தின் நிலையை அறிவிக்க வேண்டும். இதைப் போன்ற தவறான முன் மாதிரி தமிழகத்திலிருந்து தொடங்காமல் தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் இருக்கிறது


Tetra
செப் 10, 2026 17:35

அதிமுக போட்டியில்லாமல் வென்று விட்டதாக நினைக்கிறார்களா?


சந்துரு
செப் 10, 2026 17:33

விஜயுடன் 20 ஆண்டு கஷ்டப்பட்டு பயணம் செய்தவர்கள் நிறையப் பேர் காத்திருக்க பணத்துக்கும், பதவி ஆசைக்கும் நேற்று கட்சி மாறியவர்களுக்கு மீண்டும் இன்று சீட். கட்சி மாறிய இவர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து விட்டால் இன்னும் நிறைய எம்.எல்.ஏக்கள் மீண்டும் நமக்குதான் சீட் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் த.வெ.க விற்கு வருவார்கள் என்று கணக்கு போடுகிறார்கள்.


D Natarajan
செப் 10, 2026 16:49

TVK ன் இந்த இரு வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த கேடுகெட்ட , பணத்தாசை பிடித்த TVK வேட்பாளர்கள் வோட்டு கேட்பார்கள். தொகுதி மக்களே , எவ்வளவு பரிசுப்பொருட்கள் கொடுத்தாலும் இந்த TVK ன் இந்த இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடியுங்கள்.


Tetra
செப் 10, 2026 17:31

₹200 ₹260 ஆகி விட்டதா? சத்தம் பலமாக இருக்கிறதே


D Natarajan
செப் 10, 2026 18:45

TETRA விசில் குஞ்சுகளுக்கு பயமாக இருக்கிறதோ


PALANISWAMY
செப் 10, 2026 16:21

இதுதான் மாற்றம். அதிமுக ஊழல் கட்சி. அதில் நின்று வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்து தவேகவில் சேர்ந்து தேர்தலில் நின்றால் அவர்கள் தூய சக்தி ஆகிவிடுவார்கள். இதற்க்கு மக்கள் பணத்தை செலவு செய்வார்கள். நல்ல மாற்றத்தை தவேக தந்துகொண்டு இருக்கிறது. ஊழல் லஞ்சம் குறிப்பிட்டவர்களை பாதிக்கும். இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் ஒரு தலைமுறையே பாதிப்பார்கள். கொடுமை. இதெயெல்லாம் பார்த்தும் மக்கள் இவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற்றால்....? பி. எஸ். வீரப்பா மஹாதேவி படத்தில் சொல்வதை நினைத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.


பாமரன்
செப் 10, 2026 15:21

இதுவரை வந்த முப்பத்தி சில்லறை கருத்துகளில் ஒரு அப்ரசண்டி கூட நம்ம பகோடா கம்பெனி நிக்கனும்


pomaar
செப் 10, 2026 15:55

பாமரனுக்கு இப்பவே பேதி ஆகுது


செந்தூரான்
செப் 10, 2026 15:12

ஒரே நிமிடத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இழுத்து மூடி தனக்கு வாக்களித்த பல ஆயிரக் கணக்கான ஜென்சிக்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டவர்களுக்கு இடைத் தேர்தல் தக்க பாடத்தை கற்றுத் தரும்.


Kavi Priyan Adelaide
செப் 10, 2026 14:44

ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் சிலபல காரணங்கள்சல் ராஜினாமா செய்துவிட்டு, மட்துபடியும் அதே மக்கள் முன் போய் நின்று மறுபடியும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று எந்த முகத்தை வைத்துகொண்டு வாக்கு கேட்பார்கள்….


மேலும் செய்திகள்