உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கஞ்சா வாசனை வருவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பின்னர் ஆய்வு செய்த போது 3 அடி உயரத்திற்கு கஞ்சா வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கஞ்சா செடியை வேரோடு பிடிங்கி சென்றனர். இது குறித்து டாக்டர்கள், நோயாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரும் வளர்த்தார்களா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
டிச 25, 2025 18:58

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு. திருட்டு விடியல் ஆட்சியில் போலீஸ் ஸ்டே.ஷன் குள்ளேயே வளந்தாலும் ஆச்சரியமில்லை.


Anantharaman Srinivasan
டிச 25, 2025 18:56

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ந்துள்ளளதைப்பற்றி டாக்டர்கள் நோயாளிகளை கேட்டு என்ன பயன்..? வட்ட கவுன்சிலர் மாவட்டத்தை கேக்கணும்.


Muralidharan S
டிச 25, 2025 18:30

திராவிஷ மாடலில் இது எல்லாம் ரொம்ப சாதாரணமப்பா...


Mani . V
டிச 25, 2025 16:50

எந்தக் கொம்பனும் குறையே சொல்ல முடியாத எழவு மாடல் ஆட்சி. இதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணம் என்ற பீத்தல் பெருமை வேறு.


karupanasamy
டிச 25, 2025 14:05

லி மற்றும் ன் இடம் மாறியிருப்பதால் வேறு இடத்தில் மீண்டும் நட்டு விடும்படி போலி சுக்கு சாரிடம் இருந்து அழுத்தம் வந்திருக்கும் பத்திரமாக புடுங்கி மிகபத்திரமாக வேறு இடத்தில் நட்டிருப்பார்கள் திராவிடமாடல் போலீசார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 25, 2025 14:33

குசும்பு அதிகம்பா....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை