வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காசா கிராண்ட்-க்கு மட்டும் விதிவிலக்கா? சின்னமலை அடையாறு ஒட்டிய இடத்தில் 1 உள்ளது, ஏசு அழைக்கிறார் சர்ச்சு ஒன்றும் கட்டுப்பட்டுள்ளது... மேலும், பொழிச்சலூரில் அடையாறு ஆறு ஒட்டிய இடத்தில் காசா க்ராண்டு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது... இவர்கள் ஆக்ரமிக்கவில்லையா? ஏழை பாழைகள் வீடு கட்டினாமட்டும் ஆக்ரமிப்பா? இது எந்த ஊர் ஞாயம்? அவன் கட்டினாலும் வீட்டை வாங்குறான் பாரு அவன்தான் ....... 2 வாகனம் கூட 2, 3 மாடி தூக்கி கொண்டு போகலாம், காரை எப்படி மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவான்? காசா (கிரண்டா காசு வாங்கிறதுக்கு காசா கிராண்டு பேரு பொறுத்தமாதான் வச்சுஇருக்கான்) காசு வாங்கிக்கிட்டு போயிடுவான், வாங்கினவன்? கடன் வாங்கின பேங்க் (வாழ்நாள் சேமிப்பு மொத்தமாய் போயி), கோர்ட்டுக்கு நடையா நடக்கணும்? வெள்ளத்தில் வீட்டு உபயோக பொருட்களும் பறிகொடுத்துட்டு இருக்கணும்.
நீர் நிலைகளின் மேல் ஆக்கிரமிப்பு செய்து கட்டியது அங்கீகாரம் கொடுத்த அதிகாரிகள். மின் இணைப்புக்கு அங்கீகாரம் கொடுத்த அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுங்கள். சென்னையில் நிறைய ஏரிகள் காணவில்லை. எல்லாம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதற்கு அனுமதி கொடுத்தவர்கள் அரசியல் வியாதிகள். அவர்கள் ஆதரவு கொடுக்கும்வரை அகற்ற முடியாது. அக்காலத்தில் ஊர்களுக்கு என்று குளம் இருக்கும் இப்பொழுது குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். நீதிமன்றம் காலம்தாழ்ந்து நடவடிக்கை எடுக்கிறது. ஆரம்பத்தில் எடுத்திருந்தால் நீர்நிலைகளை காப்பாற்றி இருக்கலாம்
முன்னாள்.அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புது பேருந்து நிலையம் நீர்நிலை மேல் தான் கட்டப் பட்டுள்ளது.அதற்கு அனுமதி கொடுத்தது அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முருகன் என்று பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறார். நீதி மன்றம் சுயமாக நடவடிக்கை எடுக்குமா? மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் நீர் நிலை மேல் கட்டப் பட்டது தான். அதே போல் மதுரை உயர் நீதி மன்ற வளாகமும் ஏரியின் மேல் கட்டப் பட்டதுதான். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சும்மா உதார் விடுகிறார்கள்.
காசு உள்ள பக்கம் சட்டம் வளைந்து கொடுக்கும். இதுதானே காலம் காலமாக நடைமுறை.
நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலத்தடி நீரை குறைக்கும். ஆக்கிரமிப்பு உதவி அரசியல் கட்சிகள். தாசில்தார் உள்ளூர் ஆளும் கட்சியின் எதிர்ப்பில் செயல்பட முடியாது. சாதி, மத அமைப்புகள் ஆக்கிரமிப்புக்கு உதவும் . ஆக்கிரமிப்பில் இருப்பவருக்கு ஓட்டுரிமை, ரேஷன் அந்த தொகுதியில் இருக்க கூடாது. மின் இணைப்பு கொடுக்க கூடாது. வரி எதுவும் வசூலிக்க கூடாது. அருகில் உள்ள, பிறந்த, படித்த, 5 ஆண்டுகள் வாழ்ந்த தொகுதியில் ஓட்டு உரிமை இருக்க வேண்டும். தபால் முகவரி கேர் ஆப் தாசில்தார் அல்லது போஸ்ட் மாஸ்டர் என்று இருக்க வேண்டும். தற்போத உச்ச நீதிமன்ற உத்தரவு படி இலவச பட்டா, வாடகையில் இருந்தால் வீடு சொந்தம், உழுதல் நிலம் சொந்தம் என்ற முகமதியர், கிருத்துவ ஆட்சி கால சட்டம் செல்லாது. சொத்து கிரயம் செய்தால் மட்டும் வாழ, மறு விற்பனை உரிமை. மற்றவை செல்லாது. திராவிடர் ஆதிக்கம் ஒழியும் காலம் துவக்கம்.
நீதியரசர்களே.நீங்கள் அரிதாக நடைமுறைகளை எதிர்த்து நீதி வழங்குகிறீர்கள். நீங்க எத்தனை உத்தரவு போட்டாலும் அவைகளை எக்ஸிகியூட் பண்ண அரசாங்கம் தானே வரணும். நாங்களே அனுமதி கொடுத்துட்டு நாங்களே அகற்றுவோமா? தீர்ப்பு தீர்ப்பாகவே இருக்கும். நாங்கள் நாங்களாகவே இருப்போம். நாங்க யாரு?
ஆக்கிரமிப்பது யார்? அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களின் உத்தரவு இல்லாமல் அங்கு காலி செய்ய அதிகாரிகள் சென்றால் பின்புலத்தில் உள்ளவர்களே மிரட்டுவார்கள். அதனால் கணம் நீதிபதி அய்யா அவர்களே தீர்ப்பை வழங்கிடுங்க.
கருணாநிதியின் வசனத்தை மிஞ்சுகின்ற நீதிபதிகளின் வார்த்தைகளால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. சென்னையில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தனியார் கல்லூரிகள் எவ்வளவு இருக்கிறது என்பதை நீதியரசர்கள் உணராதவர்களா என்ன? அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் இருந்தால் இப்படித்தான் அந்த கல்லூரிகளின் முதலாளிகளுக்கு கொடுக்கின்ற சலுகைகள் இப்படி தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கு கிடைக்காது. தள்ளுபடி செய்வீங்க அப்படித்தானே? வீடு கட்டும்போது அனுமதிப்பது, மின் இணைப்பு தரும்போது அந்த இடம் நீர்நிலையை சார்ந்தது என்பது தெரியாதா இந்த அதிகாரிகளுக்கு? ஏன் அனுமதிக்கணும் அப்புறம் இடிக்க சொல்லணும்? அதற்குண்டான இழப்பீட்டை அரசாங்கத்திடமிருந்து வாங்கிகொடுங்க நீதிபதிகளே... இல்லையேல் நீர் நிலைகள் மீது கட்டப்பட்டுள்ள அணைத்து கட்டிடங்களையும் இடிக்க உத்தரவு போடுங்களேன் பாப்போம். நாங்களும் எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது ?
ஆக்ரமித்தது அரசியல் வியாதிகளாக இருக்கும் ஆப்புல சிக்கியது அதிகாரிகள்
கையாலாகாமல் அழுவதை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த நாட்டின் துரோகிகளுக்கும் விரோதிகளுக்கும்
பொறுத்து கொள்ள முடியாது இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என்று டயலாக் பேசுவதால் மட்டும் ஒன்றும் நடக்க போவது இல்லை. களத்தில் இறங்கி மேற்பார்வை செய்து வேலை வாங்க வேண்டும். அதற்கு தான் கவர்னர் கலெக்டர் இருக்கிறார்கள். கவர்னரை இரப்பர் ஸ்டாம்ப் ஆக்கினாலும் கலெக்டரை இஷ்டத்துக்கு பணியிட மாறுதல் தந்தாலும் எதுவும் நடக்க போவது இல்லை.
மேலும் செய்திகள்
ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
21-May-2025