வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாஜகவின் "பெட்டிகள்" கிடைத்தபிறகு கூட்டணி அறிவிப்பை பாமக ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பார்.
சென்னை,: ''பா.ம.க., தொண்டர்கள் எந்நாளும் என் பக்கம் தான்,'' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.மூன்றாவது நாளாக சென்னையில் முகாமிட்டுள்ள ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:
பா.ம.க., தொண்டர்கள் எப்போதும், எந்நாளும் என் பக்கம் தான் உள்ளனர். என்னை குலதெய்வமாக, கடவுளாக நினைக்கக்கூடிய கோடானு கோடி தொண்டர்களை பெற்றுள்ளேன். தொண்டர்கள் தான் என் சொந்தங்கள்.தொண்டர்கள் தான் எல்லா வகையிலும் என் வழிகாட்டிகள்; அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எதையும் செய்வேன்.பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கு, விரைவில் நல்ல தீர்வு ஏற்படும். அது பா.ம.க.,வுக்கும், நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும். அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும். பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி குறித்து, இப்போது எதுவும் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவின் "பெட்டிகள்" கிடைத்தபிறகு கூட்டணி அறிவிப்பை பாமக ராமதாஸ் வெளிப்படையாக அறிவிப்பார்.