உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதி விபத்து - 4பேர் பலியானார்கள். - 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ரோட்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது.இதில் குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன்(1), ஜோதிகா(25), லட்சுமி (55), பாண்டிச்செல்வி(42) ஆகிய நான்கு பேர் பலியாகினர். மேலும் கவியாழினி (1), ஜெயபாண்டி (44), கருப்பாயி (55) ஆகிய 3 பேர். படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி