உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஷோ ரூம் கண்ணாடியை உடைத்து கார் திருட்டு

ஷோ ரூம் கண்ணாடியை உடைத்து கார் திருட்டு

ஆயக்குடி : பழனி - திண்டுக்கல் சாலையில் ஆயக்குடி அருகே கார் விற்பனை ஷோ ரூம் உள்ளது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ஷோ ரூமின் பக்கம் உள்ள கழிப்பறை ஜன்னல் வழியாக ஷோரூமுக்குள் புகுந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க், உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். அறையில் வைக்கப்பட்டிருந்த நீல நிற சொகுசு காரின் சாவியை எடுத்து, காரை இயக்கி, ஷோ ரூமின் முன்புறம் உள்ள கண்ணாடி கதவை, காரை வெளியே எடுத்துச் சென்றனர். அப்போது, இரவு நேர காவலாளி அப்பகுதியில் இல்லை.ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளமடத்துப்பட்டி பகுதியில் கார் நின்றதை போலீசார் கண்டறிந்தனர். அங்கு விசாரணை செய்த ஆயக்குடி போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 24, என்பவரை கைது செய்து காரை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை