உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டனுக்கு எதிராக போராடிய 5000 பேர் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் மூர்த்தி * அமைச்சர் மூர்த்தி தகவல்

டங்ஸ்டனுக்கு எதிராக போராடிய 5000 பேர் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் மூர்த்தி * அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை : மதுரை மேலுார் அருகே டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீதான வழக்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.மதுரை மாநகராட்சியில் விடுபட்ட வார்டுகளில் ரூ.471 கோடியில் புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் மேலுார் மக்களுக்கு துணையாக நிற்கிறார். மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியாது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்வேன் என உறுதியுடன் கூறிய தைரியமுள்ள ஒரே முதல்வர் ஸ்டாலின். மேலுார் பகுதியில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட அள்ள முடியாது என தெளிவாக கூறியுள்ளார்.ஆனால் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் கட்சி தலைவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக மாநில அரசு செயல்படுத்த கூடிய திட்டம் என்று கூறியதன் மூலம் மாநில அரசு மீது மத்திய அரசு வதந்தி பரப்புகிறது. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய மேலுார் உட்பட 48 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகவும் சிலர் அரசியல் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அதற்குமுன் 5000 பேர் மீதான வழக்கை ரத்து செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி