உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொதுச்செயலராக இ.பி.எஸ்., தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

அ.தி.மு.க., பொதுச்செயலராக இ.பி.எஸ்., தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை 11ல் ந டந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கல்லை சேர்ந்த சூ ரியமூர்த்தி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை நான்காவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீ திபதி பி.பி.பாலாஜி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, 'கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது' என்றார். சூரியமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, ''கட்சி விதிப்படி பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த விதியை மாற்ற முடியாது,'' என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்; சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி