உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு

சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கில், வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான், நீதித்துறையையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதாக, வக்கீல் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த மனு மீது நடந்த விசாரணையின் போது, எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால், இதுவரையில் 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMESH
ஏப் 18, 2025 12:22

சீமான்... சவுக்கு சங்கர்....மீது வழக்கு பதிவு.. சவுக்கு சங்கருக்கு சிறைவாசம்... பெண்களை இழிவு படுத்தி பேசிய பொன்முடி என்னும் ஜந்துக்கு போலிஸ் பாதுகாப்பு...அரசு காரில் பவனி.. அமைச்சர் பதவி ஒரு கேடு...இது தான் திராவிட மாடல் ஆட்சி


naranam
ஏப் 16, 2025 21:56

மதுரை வெங்கடேசன் பேசிய பேச்சுக்கு யார் தண்டனை கொடுப்பது?உடனே பதவி இறக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டாமா?


மதிவதனன்
ஏப் 17, 2025 00:12

உண்மை ஹ ராஜா பேசியத்திற்கு இந்நேரம் தண்டித்து இருக்கணும்


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 18:49

வீடியோவை சன்டீவியில் பார்த்தால் பாராட்டுவது மாதிரியும் ஜெயா டீவியில் பார்த்தால் எதிர்ப்பது மாதிரியும் தெரியும்


Balakrishnan karuppannan
ஏப் 16, 2025 18:19

நீதிபதி பதவி என்பது தி மு க போட்ட பிச்சை என்று ஆர் எஸ் பாரதி கேவலமா சொன்னதற்கு பதிந்த வழக்கு என்ன ஆனது


TRE
ஏப் 16, 2025 18:13

புடிச்சி உள்ள போடுங்க ஜட்ஜ் ஐயா விஜயலக்ஷிமி கேஸுல உச்ச நீதிமன்றத்தில் பெயில் வாங்கிட்டான் பிஜேபி தயவுல


Yasararafath
ஏப் 16, 2025 17:52

சீமான் மீது வழக்கு போட்டது சரி


சமீபத்திய செய்தி