மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது..
08-Oct-2025
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, திருவானைக்காவல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவர் பீர் பாட்டில்கள், வெளிநாட்டு மதுபாட்டில்கள் என, 60க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை எடுத்து வந்தது தெரிந்தது. போலீசார் விசாரணையில், மது பாட்டில்களை கடத்தியவர், திருவானைக்காவலை சேர்ந்த தனசேகர், 21 என்பதும் சமயபுரம் ஆதிசங்கரர் பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு டிப்ளமா மாணவர் என்பதும் தெரிந்தது. திருச்சி மதுவிலக்கு போலீசாரிடம் அந்த மாணவர் ஒப்படைக்கப்பட்டார்.
08-Oct-2025