உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது; சீமான் ஆவேசம்

ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது; சீமான் ஆவேசம்

சென்னை: 'ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் நெல்லை இளைஞர் ஆணவக் படுகொலை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: படித்த பிள்ளைகளிடம் இப்படி ஒரு உணர்வு இருக்கிறது. கல்வி வந்து அறிவை போதிக்க வில்லை. அறத்தை போதிக்கவில்லை, வாழ்க்கை நெறியை போதிக்கவில்லை. கல்வி வியாபாரம் ஆனதால், அந்த சிந்தனை அப்படியே இருக்கிறது, மறைக்கப்பட வில்லை. படித்தவர்கள் எல்லாம் அதனை கடந்து வருவார்கள் என்று சொல்வார்கள். ஜாதி, மத உணர்ச்சி கடந்து, பேரன்பு கொண்டவனாக வருவான் என்பதற்கு புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது. இதைவிட கொடுமை பள்ளி மாணவர்கள் ஜாதி வெறியுடன் வெட்டி கொண்டது, அதே நிலத்தில் நடந்தது தானே? பிஞ்சு நெஞ்சுக்குள் நஞ்சு விதை விதைக்கப்படுகிறது.

ஜாதியும், மதமும்...!

ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியல் செய்கிறது. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்.நாட்டின் உள்துறை அமைச்சர் மதுரையில் பேசும்போது ஹிந்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார். இந்திய மக்களின் ஒற்றுமை என்று பேசி இருக்க வேண்டும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட சமயம் மதம் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை கொட்டுவதை தங்களது அரசியல் என்று இருந்தால், அது எப்படி நாடு சரியாக இருக்கும். இங்கு மதமும் ஜாதிய உணர்ச்சியும் தான் அரசியலை தீர்மானிக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

V.Mohan
ஜூலை 31, 2025 21:32

பெரியார் ஜாதியை எதிர்த்து சமூக நீதி வேண்டுமென்றார். ஆனால் திமுக உள்பட ஜோசப் விஜய் வரை, தங்களது கட்சிக்காக மதத்திற்கும், ஜாதிக்கும் கொள்கை வேண்டுமென சொல்கிறீர்கள்? இந்து மதத்தில் தானே சாதிப் பிரிவினை??? இந்து மதத்தில் இருந்து உயிருக்கு பயந்து வந்தேறிகளின் மதத்திற்கு மாறினவங்களுக்கு எதுக்கு சாதி சலுகை???. மதசார்பின்மை பேசுறவங்க, சாதி அரசியலில் சலுகைகள் கிடைக்கும்னுட்டு அடித்தட்டு மக்களை தூண்டி விடுறாங்க. மத அரசியல் செய்யறவங்க, சாதியை விட்டிடறதனால, பட்டியலின மக்களும், எம்.பி. சி. க்களும் மதசார்பின்மை கும்பலின் இட ஒதுக்கீடு என்ற மாயவலையில் சிக்கிவிடறாங்க. ஆக சாதி மதம் இரண்டுமே தமிழக மக்களை சுரண்டி முட்டாளாக்கும் திமுக விடியல் கும்பலிடம் தஞ்சமடைந்துள்ளது. மக்களை திசை திருப்பி நாசமாக்கும் இந்த அரசியல் கட்சிகள் ஏன் 78 ஆண்டுகள் கழிந்த பின்னரும் சாதி கணக்கெடுப்பு வேண்டும் என்று மல்லு கட்டுகின்றன?? நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்னு சொல்லலியே , ஏன்?நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான குடியுரிமை பெற்றவர்களின் கணக்கெடுப்பு மட்டும் நடத்த கூடாதாம்???.என்ன ஒருதலைப்பட்சமான நாடகம் ?????. நாடு முக்கியம் சீமான் ₹


Haja Kuthubdeen
ஜூலை 31, 2025 19:39

இதே இப்பத்தான் தெரியுதா????


Mecca Shivan
ஜூலை 31, 2025 18:46

அப்ப ஒன்னு பண்ணு ..இடஒதுக்கீடு ஜாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்று சொல்லு .. இட ஒதுக்கீடும் வேண்டும் ஜாதி அடிப்படையில் ..ஜாதி மதம் இருக்கவும் கூடாதுன்னா எப்படி சைமனு ?


மூர்க்கன்
ஆக 01, 2025 14:07

அடேய் அறிவாளி?? ஒருத்தன் வேலை வெட்டிக்கு போகாம குடிச்சிட்டு ஊதாரியா திரிஞ்சா அவன் வீடு பொருளாதாரத்தில் வறுமை தாண்டவமாடத்தான் செய்யும் ஒருவன் ஏழையாக இருப்பதற்கு சமூகம் ஒரு காரணமில்லையெனின் அதற்கு சமூகம் எதற்கு பொறுப்பேற்று இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாறாக ஒரு சாராரை மற்றொரு பிரிவினர் ஏமாற்றி அவர்களை தின விவசாய கூலிகளாகவும் , நாவிதர்களாகவும் , குயவர்களாகவும் , சலவை தொழிலாளியாகவும் பிறப்பின் அடிப்படையில் சாதீய கட்டமைப்புடன் தங்கள் நலனுக்காக சமூகம் பயன் படுத்தி கொண்டதால் இது ஒரு சமூக குற்றம் அதனால் சமூகம் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பொறுப்பேற்க வேண்டும் இது எதுவுமே புரியாமல் வந்துட்டார் இந்த மொக்க சாமி.


Khalil
ஜூலை 31, 2025 18:29

கூடவே மொழியையும் சேர்த்துக்கிட்டா , உங்க டங்குவார் அந்துபோகும்னு விட்டுடீங்களா


sundarsvpr
ஜூலை 31, 2025 17:09

ஹிந்து என்று கூறியதில் தவறு இல்லை. சமணம் பௌத்தம் முகமதியம் கிருத்துவம் முதலிய மதங்களுக்கு மாறுமுன் எல்லோரும் ஹிந்துக்கள். எனவே ஹிந்துக்கள் ஒற்றுமை என்பது இந்தியர்கள் என்பதுதான்.


Svs Yaadum oore
ஜூலை 31, 2025 17:04

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு சிறை சென்ற குற்றவாளி ....அந்த குற்றவாளி மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மகான் .....


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 31, 2025 17:03

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை உணவை உடைகளை சொந்தன்களை பந்தங்களை கட்டமைத்த மதத்தை எப்படி இல்லை என்று சொல்ல முடியும். இட்லி கடை முழுக்க பிரியாணி கடையாக. டீ கடை முழுக்க பேக்கரியாக மாறி நாரி கிடக்கிறது. சாராய சாம்ராஜ்யந்கள் உருவாகி விட்டன. ஒதுக்கீடு என்ற பெயரில் அரசியல் செய்வது யார். எப்படி ஜாதிகள் அற்று போகும்.


KRISHNAN R
ஜூலை 31, 2025 16:55

எழுபது வருஷமா அதான் நடக்கு.... கும்பல் இருந்தா ஒரு நீதி.... இல்லேன்னா..... அல்வா


Anand
ஜூலை 31, 2025 16:55

அதனால் தான் உங்களை போன்ற அரசியல் வியாதிகள் மிகப்பெரிய ஆதாயம் பெற்று சுகபோகமாக பிழைப்பு நடத்துகிறீர்கள்..


Pandi Muni
ஜூலை 31, 2025 16:47

அரசியில் வியாதிங்க ரொம்ப நல்லவிங்க. சாதி மதம் மட்டும் இல்லன்ன அத்தன பயலும் வெசத்த குடிச்சிட்டு செத்துருவானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை