உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமமான வாய்ப்பு மற்றும் உரிமை வழங்க ஜாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநில அரசே கணக்கெடுப்பு நடத்தலாம் என்று சில அரசியல் கட்சிகளும், மத்திய அரசுதான் நடத்த முடியும் என்று தி.மு.க.,வும், மாறி மாறி கூறி வருகின்றன.நாட்டில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்பட வில்லை. இந் நிலையில், தமிழகத்தில் மக்களின் சமூக, பொருளாதார நிலையை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தாக்கலானது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இந்நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 21, 2025 20:07

ஜாதியே வேண்டாம் என்று மேடைக்கு மேடை முழங்குவார்கள். பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் சொல்வார்கள். மொத்தத்தில் தேச ஒற்றுமைக்கு எதிராக நடப்பதும், இந்துக்கள் ஒன்றுபடாமல் ஜாதியின் பெயரால் பிரிந்திருப்பதை உறுதி செய்வதும் சமூகநீதி என்ற போலி பிம்பத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.


Dharmavaan
மார் 21, 2025 18:26

எல்லா ஒதுக்கீடுகளும் , மைனாரிட்டி சலுகைகளும் முழுதும் நிறுத்தப்பட வேண்டும்


அப்பாவி
மார் 21, 2025 17:34

உச்சநீதி மன்றம் எத்தனை வருஷம் கழிச்சு தூங்கி எழுந்திருக்கும்னு சொல்ல முடியுமா? பாபர் மசூதி மாதிரி 509 வருஷ வழக்காயிடக் கூடாது.


Subramanian Marappan
மார் 21, 2025 17:10

இதில் நீதிமன்றம் பல கேள்விகளை திமுகவை நோக்கி கேட்டு இருக்க வேண்டும் சீமான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை. அதன் அடிப்படையில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு கிருத்துவர்கள் முஸ்லிம்கள் 3.5 சதவீத உள் ஒதுக்கீடு கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது? எதற்காக மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவீதம் அமல் படுத்த விழைகிறீர்கள்? ௬.௫ சதவீதம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவி என்று மக்கள் வரிப்பணம் ஏன் சிலர் பயன்பெற தொடர்ந்து விரயம் செய்யப்படுகிறது.இன்னும் எத்தனை காலம் இது தொடரும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை