உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவெக பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nywt3sfu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

LION Bala
டிச 13, 2025 14:04

பொறுப்பற்ற தலைவன் தவெக விஜய், தன்னால் ஏற்பட்ட கரூர் சம்பவத்திற்கு பத்திரிகையாளர்களை கூட்டி மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க தவறி விட்டார். சூழ்நிலையை திறம்பட கையாளத் தெரியாத திறமையற்றவர் முதலமைச்சர் ஆகி என்ன சாதித்து விட முடியும்?


Barakat Ali
டிச 13, 2025 12:13

உள்ளே இருக்க வேண்டிய இரு வி ஐ பி க்களில் ஒருவர் விஜய் .... .


திகழ்ஓவியன்
டிச 13, 2025 11:48

. நம்மாள் தான் என்னை பார்க்க வந்து தான் இறந்தார்கள் என்று ஒரு குற்ற உணர்வு கூட இல்லா தற்குறிகளின் தலைவன் தான்


திகழ்ஓவியன்
டிச 13, 2025 11:45

நடத்தி என்ன பிரயோஜனம் , தன்னை நம்பி வந்தவர்கள் குழந்தைகள் சோறு தண்ணீர் இல்லாமல் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள் , எங்கே தன்னை கைது செய்து விடுவார்கலோ என்று எண்ணி சென்னை ஓடி வந்த தலைவன், தொண்டர்களை விட தன உயிர்க்கு ஓடிய பயந்தான்கொள்ளி தலைவன், இவன் தான் இப்படி என்றால் இரண்டாம் கட்ட தலைகள் கூட மருத்துமனையில் அனுமதிக்க பட்டு இருந்தவர்களுக்கு தண்ணீர் BUISCUT என்று உதவி செய்யாமல் , புஸ்ஸி PONDY க்கு ஓட்டம் , ஆதவ் டெல்லிக்கு ஓட்டம் , எல்லாரும் தலைமறைவு எவ்வளவு அசிங்கம் , இதில் இவருக்கு முதல்வர் பதவி வேறு ஆசை


திகழ்ஓவியன்
டிச 13, 2025 11:38

ஒன்றும் நடக்காது , நேற்று apex கோர்ட்டில் , ஏதோ இருக்கிறது அப்புறம் எதற்கு சிபிஐ விசாரணை , தமிழ்நாட்டு பதிவாளர் அறிக்கை ,சிரிப்பு தான் இதில் ருந்தே யாரையோ காப்பாற்ற நாடகம் நடக்குது என்று


Venugopal S
டிச 13, 2025 11:09

அவருடைய வக்கீல் என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று இந்நேரம் நன்றாகவே சொல்லிக் கொடுத்து இருப்பார்!


viki raman
டிச 13, 2025 10:04

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்... விஜய் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.


பாலாஜி
டிச 13, 2025 08:55

கரூர் மாநாட்டுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுபடாமல் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் செய்த விஜயை சிபிஐ எந்த தலையீடு ஏற்பட்டாலும் அவற்றை நிராகரித்து நேர்மையான விசாரணை நடத்தவேண்டும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 13, 2025 08:52

விடியலின் வெற்றியை தடுக்க மத்திய அரசின் சதி, சிபிஐ அல்ல அந்த முருக பெருமானே வந்தாலும் தீயமுக வெற்றியை தடுக்க முடியாது


vaiko
டிச 13, 2025 08:28

விசாரணை நடத்த வேண்டும்


புதிய வீடியோ