உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை கேட்டு சி.வி.சண்முகம் வழக்கு

சி.பி.ஐ., விசாரணை கேட்டு சி.வி.சண்முகம் வழக்கு

சென்னை:உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது குறித்த புகார்களை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவுக்கு பதில் அளிக்க, அரசு மற்றும் போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.அ.தி.மு.க., -- எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான சண்முகம் தாக்கல் செய்த மனு:கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, என்னை கொலை செய்ய முயற்சித்தனர். அந்த சம்பவத்துக்கு பின், எனக்கும், வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு, 2021ல் விலக்கி கொள்ளப்பட்டது. எனக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன்வரவில்லை; துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பிக்கவில்லை. தொடர்ச்சியாக, உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து மிரட்டல்கள் வருகின்றன. இது குறித்து, சென்னை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை, 20 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகார்களை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் போலீசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3க்கு நீதிபதி வேல்முருகன் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ