உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிவிக்களுக்கு தணிக்கை; பார்லி குழு பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தகவல்

டிவிக்களுக்கு தணிக்கை; பார்லி குழு பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'டிவி' தொடர், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக்குழு அமைக்கக்கோரி தாக்கலான வழக்கில், 'இந்த விவகாரம் பார்லிமென்ட் குழு பரிசீலனையில் உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்ததை பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில், குடும்பத்தை கெடுப்பது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது தான் இடம் பெறுகிறது. பார்வையாளர்கள் மனதில் தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது. பாலியல் தொடர்பான படங்கள் திரையிடப்படுகின்றன. இவை கலாசாரத்தை இழிவுபடுத்துகின்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியம். வெள்ளித்திரை போல தணிக்கைக் குழு இருக்க வேண்டும்.'டிவி' நிகழ்ச்சிகள், தொடர்கள், செய்தி ஒளிபரப்புகளுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டும். தொடர்கள், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக் குழு அமைக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில், 'இந்த விவகாரம் பார்லிமென்ட் குழுவின் பரிசீலனையில் உள்ளது' என, தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'தற்போது இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mecca Shivan
மார் 19, 2025 10:48

கட்டாயம் வேண்டும்.. ott வெப்செரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தனியே தணிக்கை செய்ய குழு வேண்டும்.. குறிப்பாக குடும்பத்துடன் டிவி பார்க்கும் நேரத்தில் ப்ரா ஜட்டி மற்றும் ஆணுறை விளம்பரம் என்ற பெயரில் அரை நீல படங்கள் வருகின்றன ..சன் டிவி போன்ற பெரிய நிறுவங்கள் இந்த வேலையை செய்கிறது


Padmasridharan
மார் 19, 2025 06:41

ஒரு காலத்துல Cable TV வேண்டாம், திரைப்படங்கள் காணாமல் போய்விடுமென்று தெருவில இறங்கி போராட்டம் நடத்தின நடிகர்கள் / அரசியல்வாதிகள் இப்ப ஆளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட TV Channels வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். TV Show களில் பெண்களின் அதிகாரம் கொண்டுவந்து தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அடிமைகளாகத்தான் வைத்திருக்கிறார்கள். எல்லாரும் நடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. நினைச்சதை சொல்லலாம், பண்ணலாம் என்று ஆகிவிட்டது. நடிகர்களின் மாய வாழ்க்கையை பார்த்து இப்படித்தான் வாழவேண்டும் என்றும் திரைக்கு பின்னால் செய்யும் நல்ல காரியங்கள் காணாமல் போய்விடுகின்றன. "காஞ்சா வெச்ச கண்ணு" என்று வெற்றி நாயகன் பாடியது இளைஞர்களை தவறான வழிக்கு எடுத்து சென்றுள்ளது. இப்ப அரசியலுக்காக செய்யும் தானங்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். நடிகனே, நடிகையை திருமணம் செய்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தமாட்டேன் என்கிறார்கள். ஆனால் மக்களிடையே எதிர்பார்க்கிறார்கள். ஒருவனுக்கு_ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் கெட்டுப்போச்சி. நாமிருவர் நமக்கு இருவர் என்று மக்களுக்கு சொல்லிவிட்டு நடிகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுக்கு தலா இரண்டு குழந்தைகளை கொடுத்து மக்களை குளறுபடி செய்திருக்கிறார்கள். எல்லாரும் நடிகனென்று மாறியாச்சு அரசியல் செய்வதற்கு. தணிக்கை செய்ய ஒன்று_இரண்டு அல்ல. எவ்வளவோ இருக்கு. சிகரெட்டு மற்றும் மது உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லிவிட்டு அதையே விற்று நோயாக்கி மலிவு விலையில் அரசு மருந்தகங்கள் திறந்து வைத்து.... இன்னும் என்னென்னவோ தணிக்கை செய்யணும் சாமியோவ் திரைப்பட_அரசியல் காவல் நாடகங்களை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை