உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயலால் பாதித்த விளைநிலங்கள் மத்திய நிபுணர் குழு ஆய்வு

புயலால் பாதித்த விளைநிலங்கள் மத்திய நிபுணர் குழு ஆய்வு

கடலுார் : கடலுார் அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பேரிடருக்கு பிந்தைய தேவை மதிப்பீடு மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம், செஞ்சிகுமாரபுரம் மற்றும் மருதாடு கிராமங்களில் பெஞ்சல் புயல் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இக்கிராமங்களில் மகசூல் மதிப்பீட்டாய்வு குறித்து பேரிடருக்கு பிந்தைய தேவை மதிப்பீடு மத்திய நிபுணர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சசிகலா என்பவரின் வயலில் நெல் அறுவடை பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தளை மகசூல் 2.550 கிலோ பெறப்பட்டது. ஆனால், இயல்பான மகசூல் 15ல் இருந்து 18 கிலோ வரை கிடைக்கப்பெறும். சராசரியைவிட 80 சதவீதம் மகசூல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து, எந்த அளவிற்கு பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தேவைப்படும் கருவிகள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 28, 2025 09:03

விவசாயத்தில் புயல் வெள்ளம் மழையின்மை பூச்சி பூஞ்சான நோய்கள் எலிகள் போன்ற பல்வேறு இடர்பாடுகளால் செலவு செய்த அளவிற்கு கூட மகசூல் கிடைப்பது இல்லை.இதற்கு எந்த அரசும் தீர்வு காணாமல் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அவர்கள் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாப்புடன் இருந்தாலும் அவர்களுக்கு வாரி வழங்கி வருகிறது.


முக்கிய வீடியோ