உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை- தூத்துக்குடி ரயில்பாதை விவகாரம்: மத்திய அரசு பல்டி

மதுரை- தூத்துக்குடி ரயில்பாதை விவகாரம்: மத்திய அரசு பல்டி

சென்னை : மதுரை - துாத்துக்குடி அகல ரயில் பாதை விவகாரத்தில், மத்திய அரசு பல்டி அடித்துள்ளது. 'இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, தமிழக அரசுடன் எந்த பிரச்னையும் இல்லை' என, தெற்கு ரயில்வே வாயிலாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, தமிழக அரசு பற்றி தவறாக சொன்னதாக ஒப்புல் அளித்துள்ளார். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், கடந்த 10ம் தேதி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரை -- துாத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி, தமிழக அரசு கோரியுள்ளதாக தெரிவித்தார்.இது, தமிழக மக்களிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

போராட்டம்

ஆனால், 'திட்டத்தை கைவிடும்படி, மாநில அரசு ஒருபோதும் கூறவில்லை' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில், கடந்த 10ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.அப்போது, தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து, செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் பல கேள்விகள் கேட்டனர். ரயில்வே பணிமனையில் இரைச்சல் அதிகமாக இருந்தது. அப்போது, மதுரை -- துாத்துக்குடி ரயில் பாதை திட்டம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.அதிக இரைச்சல் காரணமாக, அந்தக் கேள்வியை, தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பானது என்று எண்ணிய அமைச்சர், அதற்கான பதிலை கூறினார். நிலம் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பிரச்னையால் கைவிடலாம் என, மாநில அரசு எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தார்.அமைச்சர் அளித்த பதிலை கேள்வி கேட்ட செய்தியாளர்கள், மதுரை- - துாத்துக்குடி திட்டத்தை கைவிடுவதாக எடுத்துக் கொண்டனர்.

பிரச்னை இல்லை

மதுரை- - துாத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசால் எந்த பிரச்னையும் இல்லை என, தற்போது மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.மாநில அரசு கைவிடும்படி கேட்டுக்கொண்டது, தனுஷ்கோடி திட்டத்தையே. தொழிற்சாலையில் எழுந்த இரைச்சல் காரணமாகவும், தேசிய அளவிலான ரயில்வே திட்டங்கள் குறித்து, ஒரே நேரத்தில் மாநில, தேசிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாலும், தகவல் தொடர்பில் பிழை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு முழு ஒத்துழைப்பு

அமைச்சர் சிவசங்கர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: மதுரை -- துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு, வாய்மொழியாகவோ, கடிதம் வாயிலாகவோ, தமிழக அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இத்திட்டத்திற்கு தமிழக அரசால் நில எடுப்புப் பணி மேற்கொள்ள, நிர்வாக அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே உறுதிப்படுத்தி உள்ளது.மதுரை -- துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம், தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே, இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்பு பணிகளுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

S.jayaram
ஜன 23, 2025 10:23

அவர்கள் மானஸ்தர்கள் தவறை ஒத்துகொண்டனர்கள், ஆனால் நாமோ இதுவரை செய்த, கூறிய தவறுகளுக்கு வருந்துகிறோம் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளீர்களா? அந்தப்பழக்கம் நம்பரம்பரைக்கே இல்லையே. மக்கள் அனைவரையும் ஆட்டுமந்தை போல தான் நடத்துகிறீர்கள்


Rajathi Rajan
ஜன 21, 2025 12:38

ஏன் ...


Sridhar
ஜன 16, 2025 19:12

தூத்துக்குடி சரி, தனுஷ்கோடி என்னவாச்சு? அத ஏன் வேணானீங்க? அதப்பத்தி பேசாம, மந்திரி செஞ்ச தப்ப பத்தியே பேசி பொழுத ஓட்ட முயற்சி பண்ணுவாங்க இந்த திருட்டு திராவிடியா கும்பல்.


varatha rajan
ஜன 16, 2025 18:00

யோக்கியர்கள் வருகிறார்கள் சொம்பை தூக்கி உள்ளே வையுங்கள் நடுவன அரசு எது வேண்டுமானால் சொல்லலாம் நமது விதி


A1Suresh
ஜன 16, 2025 17:26

எது அசிங்கம் ? ரகுமான் ஐயங்கார், அந்தோனி ஐயங்கார் என்று புனைப்பெயர் பெயர் வைப்பது தான் அசிங்கம்


abdulrahim
ஜன 16, 2025 17:38

இந்த ஈர வெங்காயத்தை முஸ்லீம் பெயரில் கருத்து எழுதும் நவீன சங்கிகளுக்கும் சொல்லவும் ...


A1Suresh
ஜன 16, 2025 17:25

திமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறையில் இருக்கும் திரு.அஶ்வின் வைஷ்ணவ் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஏதோ சிறு கவனகுறைவுக்கு இவ்வளவு பெரிய விசாரணையா ? தமிழன் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது.


Bala
ஜன 16, 2025 16:37

அவமானம். ஒரு பொருப்புள்ள மத்திய அமைச்சர் இப்படி தவறான தகவல் தருவது. சும்மாவே உருட்டுவானுங்க இங்க இருக்கிற மாடல்கள். இப்ப கடிக்க கரும்பு கிடைச்சிருக்கு. ஆனா நாங்க இன்னும் கைநாட்டுதான். முதல் கையெழத்துனு ஒண்ணு போட்டா அது நீட் ஒழிப்பு. ரகசியம் பரம ரகசியம். வேற ஜாதி பேர்ல வெட்கமில்லாமல் ஒளிஞ்சிண்டு இங்கு உருட்ராம் பாரு ஒரு கோழை.....


Kasimani Baskaran
ஜன 16, 2025 15:50

40 வெட்டிகளை தேர்ந்தெடுத்து அனுப்பியும் கூட முக்கால் நூற்றாண்டு ஆனபின்னர்தான் மீட்டர் கேஜ் பிராட் கேஜ் ஆகிறது. தொலைத்தொடர்பு மட்டும் வேண்டும் என்று அடம் பிடித்து கொள்ளை அடிப்பார்கள் - தமிழ் நாட்டுக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேன்டினில் முதல் ஆளாக போண்டா சாப்பிடுவார்கள். திராவிடக்கூட்டம் செய்த கெடுதல்கள் கொஞ்சநஞ்சமல்ல. உருட்டுவது மட்டும் நாங்கள் இல்லை என்றால் தமிழகம் இலங்கையுடன் இணைந்து இருக்கும் என்று கூட உருட்டுவார்கள்...


Ganapathy
ஜன 16, 2025 15:24

அதானே..எங்க முதல்வரு மாதிரி கரெக்டா..2500+1500=5000 அப்டீன்னு தெளிவா கேனத்தமா கூமுட்டத்தனமா சொல்லியிருந்தா இந்த குழப்பமே வந்திருக்காதே?


Velan Iyengaar
ஜன 16, 2025 13:39

நல்ல வேலை .....நேரு மேலே பழி போடல்ல ......


சமீபத்திய செய்தி