உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

இருதரப்பு விமான சேவை தொடர்பாக, மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட ஒப்பந்தங்களில், தமிழகத்திற்கு எந்த முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படவில்லை. இங்குள்ள இரண்டாம் நிலை விமான நிலையங்கள், மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், துாத்துக்குடி நகரங்களில் விமான நிலையங்கள் செயல்படுகின்றன. வேலுார் மற்றும் நெய்வேலி யில், மத்திய அரசின், 'உடான்' திட்டம் வாயிலாக, விமான நிலையங்கள் அமைக் கும் பணிகள் நடக்கின்றன. காஞ்சிபுரம் அடுத்த பரந்துாரில், 2030ம் ஆண்டுக்குள், 10 கோடி பயணியரை கையாளும் வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன.குறிப்பாக, தமிழகத்தில் இயங்கும் அனைத்து விமான நிலையங்களும், 'கிளஸ்டர்' தரவரிசை 1 மற்றும் 2ம் நிலையில் இருக்கின்றன.

குற்றச்சாட்டு

விமானப் போக்குவரத்தில், தமிழகம் கணிசமான வளர்ச்சி அடைந்து வந்தாலும், சர்வதேச சேவைகளை அதிகரிக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பொதுவாக சர்வதேச விமான சேவையில், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்தங்கள் செய்வது வழக்கம். இதில் விமானங்கள் வகை, 'பாயின்ட் ஆப் கால்' என்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியல், இடைநிறுத்தங்கள், வாராந்திர விமான சேவை எண்ணிக்கை, பயணியர் இருக்கை எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இடம்பெறும்.இதன் அடிப்படையில் தான், விமான நிறுவனங்கள் சேவை வழங்கும். அதாவது, இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான ஒப்பந்தத்தில், அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில், சென்னை அல்லது திருச்சி இருந்தால் மட்டுமே, இங்கிருந்து விமானங்களை இயக்க முடியும்.கடந்த 2014 முதல் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் புதிதாகவும், திருத்தப்பட்டும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்றில், தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் இல்லை. தனியார் விமான நிலையங்களுக்கு முன்னுரிமை தரும் வகையிலேயே, தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, மத்திய அரசு விமானப் போக்குவரத்தில் தமிழகத்தை புறக்கணிப்பது வெளிச்சமாகி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும். இதுகுறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் எச்.உபையதுல்லாஹ் கூறியதாவது:இந்தியாவில் விமான போக்குவரத்துக்காக போடப்பட்ட இருதரப்பு விமான ஒப்பந்தங்களில், 75 சதவீதம் வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளன. இவற்றில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், அபுதாபி, சார்ஜாவுக்கான விமான ஒப்பந்தங்கள் முக்கியமானவை.ஏனெனில், இவற்றில்தான் வாராந்திர பயணியர் இருக்கை எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில், இரண்டாம் நிலை நகரங்களாக உள்ள திருச்சி, கோவை, மதுரை யில் இருந்து, முக்கிய இடங் களுக்கு சர்வதேச சேவைகள் இல்லை. 'பாயின்ட் ஆப் கால்' பட்டியலில், மத்திய அரசு இந்த நகரங்களை சேர்க்கவில்லை.அதே சமயம், மற்ற மாநிலங்களில் உள்ள அமிர்தசரஸ், லக்னோ, கோவா, ஜெய்ப்பூர் போன்ற இரண்டாம் நிலை விமான நிலையங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில், தமிழக நகரங்களை மத்திய அரசு சேர்க்காததால், இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ல் இருந்து இதுவரை 60க்கும் அதிகமான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஓமன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடனான ஒப்பந்தங்கள், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும், ஏற்கனவே இருந்த அனுமதிக்கப்பட்ட நகரங்கள் மட்டுமே நீடிக்கின்றன. தமிழக நகரங்கள் சேர்க்கப்படவில்லை. திருச்சி, கோவை, மதுரையில் இருந்து துபாய் மாதிரியான இடங்களுக்கு செல்ல அதிக தேவை இருந்தும், இந்த நகரங்களை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சேர்க்கவில்லை.

கோரிக்கை

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு விமான சேவை வழங்க, அந்நாட்டு அமைச்சகம் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் டில்லி, மும்பை போன்ற தனியார் மெட்ரோ விமான நிலையங்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும். தமிழக மக்கள் அதிக கட்டணம் செலுத்தி, தனியார் விமான நிலையங்களை நாடிச்சென்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, தமிழக நகரங்களுக்கு சர்வதேச விமான சேவையில் முன்னுரிமை அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

தமிழக அரசு பாராமுகம்

விமான போக்குவரத்தில் தமிழகத்துக்கு எந்த முன்னுரிமையும் அளிக்காமல், மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அரசு துறைகளுக்கு நிதி வராவிட்டால், மத்திய அரசை குறைகூறி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் தமிழக அரசு, விமான போக்குவரத்தில் புறக்கணிப்பது குறித்து கண்டுகொள்வதில்லை. ஆளுங்கட்சியான தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, 39 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள், விமான போக்குவரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்புவதில்லை.புதிதாக வெளிநாட்டு நகரங்களுக்கு சென்னையில் இருந்து விமானங்கள் இயக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசும் பாராமுகமாக இருந்தால், பாதிப்பு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும்தான்.

ஒப்பந்தங்கள் விபரம்

மொத்த நாடுகள்57முக்கிய நாடுகள்ஓமன், சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், மொரீஷியஸ், ரஷ்யா.இதில் எந்த ஒப்பந்தத்திலும் தமிழக விமான நிலையங்கள் சேர்க்கப்படவில்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

K.n. Dhasarathan
ஜூலை 10, 2025 21:16

மற்ற மாநிலங்களில் இரண்டாம் நிலை நகரங்களில் விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்போது, இங்கே வேண்டுமென்றே எந்த வேலைகளும் முன்னெடுப்பதில்லை. தமிழகம் மோசமாக புறக்கணிக்க படுகிறது.


Vijay D Ratnam
ஜூலை 10, 2025 21:13

ஒரு காலத்தில் சர்வதேச விமான பயணம் என்றால் கர்நாடக, ஆந்திர மக்கள் சென்னைக்குத்தான் வருவார்கள். இன்று பெங்களூர், ஹைதராபாத் இரண்டும் சென்னையை விட அதிக பன்னாட்டு விமானங்களை இயக்குகிறது. சகலவிதமான தொழில், வணிகம், சர்வதேச துறைமுகம் என்று பல மில்லியன் மக்களை கொண்ட சென்னை விமான நிலையம் பெரிதாக டெவலப் ஆகவில்லை. பரந்தூர் சர்வதேச விமான நிலையம் அவசியமான, அவசரமான ஒன்று. ஆனால் இதிலும் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் போல் அரசியல் புகுந்துவிட்டது. நிலம் எடுப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் இங்கே ஒரு கக்கூஸ் கூட கட்டமுடியாது. மதுரை, கோவை விமான நிலையங்களை விரிவுபடுத்தி அதிக விமானம் இயக்கவேண்டும்.


Prasad
ஜூலை 10, 2025 18:47

We keep on confronting the Central Government and protest against all central schemes! We need to adapt Kerala formula - Anti move against Party and Pro move with Central Govt. Investment will follow


Gopalan
ஜூலை 10, 2025 16:23

Coimbatore is one such airport. There are thousands of workers from Kongu region working in gulf countries like Saudi,Dubai ,Qatar , Kuwait etc. The present infrastructure at CBE is good enough to operate direct flight service using single isle aircrafts like Airbus A320 or Boeing 737. Even thirty years back Indian airlines was operating flights to Sharjah. But after merger with Air India that service was stopped and never restored.instead Air Arabia was given the rights raising lot of doubts about some underhand deals during the Congress led UDF govt.One has to go to Kochi / calicut / Blore or Chennai / Bombay to catch a flight to gulf countries.


Gopalakrishnan Thiagarajan
ஜூலை 10, 2025 11:41

சுற்றியுள்ள விமான நிலையங்கள் தனியார் வசம் உள்ளன. சிறப்பான சேவை தருகின்றனர். நாம் கிணற்று தவளைகள் தனியாருக்கு விடமாட்டோம் என்று சொல்லி ஊரை ஏமாற்றுவோம்.ஏனெனில் அந்த வியாபாரத்தில் எங்களுக்கு பயிற்சி போதாது. டில்லியில் உள்ள அதிகாரிகளும் மற்ற மாநிலத்தினராய் இருப்பதால் தமிழகத்தை புறக்கணித்து அண்டை மாநிலத்து தனியார் விமான நிலையங்களை நன்றாக வளர விடுகிறார்கள்.


ASIATIC RAMESH
ஜூலை 10, 2025 11:29

விமான போக்குவரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்து பார்லிமென்டில் 39 MPக்கள் குரல் எழுப்புவதில்லை... முதல்ல இவங்க 39 பெரும் கேரளா மக்கள்தொகை, பரப்பளவு மற்றும் ஜனத்தொகையை ஒப்பிட்டு அங்குள்ள ரயில்கள் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கை ரயில் வசதி வேண்டும்னு கேட்கச்சொல்லுங்க.... அப்புறம் விமானத்திற்கு போகலாம்.....


Saai Sundharamurthy AVK
ஜூலை 10, 2025 10:24

அந்த 40 எம்.பிக்களை கேளுங்கள் !!!!


KRISHNAN R
ஜூலை 10, 2025 09:46

எப்படியும் மாநில சித்தப்பு, மத்திய பெரியப்பு.... கே லாபம்


AKM KV SENTHIL MUSCAT
ஜூலை 10, 2025 09:45

அய்யா எடிட்டருக்கு மிக்க நன்றி நான் trichy ஏர்போர்ட் ஐ பயன்படுத்துகிறேன் நேரடி சேவையாக ஓமானில் இருந்து வாரம் ஒருமுறை விமான போக்குவரத்து நடைபெறுகிறது தற்சமயம் இருமுறையாக்க பட்டுள்ளது அதுவும் நேரத்தையும் கிழமையையும் மாற்றி கொண்டே இருப்பார்கள் அதேபோல் விமான டிக்கெட் விலை சென்னை டு மஸ்கட்டை விட இருமடங்கு கூடுதலாக இருக்கும், தினமும் திருச்சி டு மஸ்கட் விமான சேவை நடைபெற்றால் விமான டிக்கெட் விலையும் நன்றாக குறையும் இதற்கு ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு யார்தான் முயற்சிப்பார்களோ


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 09:31

ஆன்மீக சுற்றுலாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு அதிகம். ஆனால் மோசமான சாக்கடை, குப்பை, சாலை ஆக்கிரமிப்பு, மட்டமான ஆலயப் பராமரிப்பு, பொதுக் கழிப்பறையின்மை என பயணிகளை விரட்டியடிக்கும் நிலைமையே உள்ளது. பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ள ஆலயங்களிலும் வருமானம் குறைவாக இருப்பதால் நிர்வகிக்க இயலவில்லை. சர்வதேச சுற்றுலாப் பயணிகள் குறைவானால் விமான நிலைய விரிவாக்கத்தால் லாபமில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை