உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது; கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது; கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

விழுப்புரம்; 100 நாள் வேலை திட்ட பட்டியலில் இருந்து, பயனாளிகள் பெயரை அகற்றியது தான், மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை என, கனிமொழி எம்.பி., கூறினார்.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:திராவிட ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. பெரிய அளவில் பெண்கள் முன்னேற்றம் உள்ளதாக கூறும் நாடுகள், சமீபத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தனர். பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் ஓரிடத்தில் கூட உச்சரிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 84 லட்சம் பயனாளிகள் பெயர்கள், 100 நாள் பணி திட்ட பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது தான் மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை. பா.ஜ., ஆட்சி ஒவ்வொரு ஆண்டும் நிதியை குறைத்து கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு கல்விக்கு கிடைக்க வேண்டிய, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதி, இந்தி பயில ஒப்புக்கொள்ளாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.100 நாள் திட்டத்திற்கான பணம் தற்போது வரை தரவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், மத்திய அரசு தருவதில்லை. தமிழக மக்களை பிடிக்கவில்லை என்பதற்காக தொடர்ந்து மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. தேர்தல் நாடகம் ஆடி, 'நாங்கள் வேறு, அவர்கள் வேறு' என அ.தி.மு.க., இங்கு பொய் கூறி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramesh Sargam
பிப் 13, 2025 13:10

உங்க அண்ணா ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்வதை பற்றி கொஞ்சம் பேசலாமா, கனிமொழியே ....?


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 13, 2025 12:58

காமராஜர் ஆட்சியில் திருமதி ஜோதி வெங்கடாசலம் திருமதி லூர்தம்மாள் சைமன் ஆகியோர் தேர்தலில் நின்று வென்று அமைச்சர்களாக இருந்தது கூட இந்த 2 ஜி அம்மையாருக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் அறிவு ஜீவியாக இருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு தூத்துக்குடி மக்கள் அமோக வெற்றிக்கு வாக்களித்திருக்கிறார்கள். வெட்கக்கேடு.


xyzabc
பிப் 13, 2025 11:43

வாங்கின ரூபாய்க்கு கணக்கு கொடுக்க முடியுமா?


jayvee
பிப் 13, 2025 11:23

மத்திய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை திராவிட அடையளத்துடன் பெயர்மாற்றி அதிலும் ஆட்டையை போடுவதுதான் மாடல் ஆட்சியா ?


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 13:04

சர்க்கரை மூட்டைகளில் இருந்த சர்க்கரையை எறும்புகள் தின்றுவிட்டன... சாக்குகளைக் கரையான்கள் அரித்துவிட்டன ..... எஞ்சியது ? ஒன்றுமில்லை ..... இதுதான் திராவிட மாடல் ......


PR Makudeswaran
பிப் 13, 2025 11:03

ஒர வஞ்சனை என்றால் உச்ச மன்றம் போகலாமே


Anand
பிப் 13, 2025 10:44

யாரும் இப்போது சட்டை செய்வதில்லை... ..


Haribabu Poornachari
பிப் 13, 2025 10:22

இவர்கள் தென் தமிழகத்தை ஒர வஞ்சனை செய்வது போலவா? தென் தமிழக மக்கள், குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் மக்கள், ஸ்டாலின் அரசின் ஒர வஞ்சனையால், தொழில் வளம் இல்லாமலும், தரமான சாலை வசதிகள் இல்லாமல் அவதி படுகிறார்கள். கனிமொழியால் இளம் விதவைகளின் எண்ணிக்கை கூடிவிட்டது


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 13, 2025 10:16

திராவிட ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. அம்மணி இவ்வளவுதான் பொய் சொல்லுவீங்களா இல்லே இதுக்கும் மேல சொல்லுவீங்களா ?1957 தேர்தலில் ஒட்டு போட எங்க பாட்டியை நான்தான் கூட்டிட்டு போனேன் .


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 10:16

டூ ஜி யில் அடித்து சுருட்டியதை மக்களிடம் கொடுத்துவிடலாமே?


Smbs
பிப் 13, 2025 09:59

உன்னுடையது இனி செல்லாது


புதிய வீடியோ