உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு சட்டம் அரசியல்வாதிகளுக்கு கிலி

மத்திய அரசு சட்டம் அரசியல்வாதிகளுக்கு கிலி

தமிழகத்தில், இதுவரை 25 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. மாணவர்கள் இடையே மது, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை, தமிழகத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழரா? ஒரு தமிழருக்கு துணை ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் நின்று ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அவரை ஆர்.எஸ்.எஸ்.,காரர் எனச் சொல்லி, தி.மு.க., கூட்டணியில் இருப்போர் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பச்சைத் தமிழர் ஒருவருக்கு ஏற்றம் கிடைப்பதை எதிர்க்கிறார்; விமர்சிக்கிறார். அது தவறு. இந்தியாவில் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், குற்ற வழக்குகளில் 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், அவருடைய பதவி பறிக்கப்படும் என்ற புதிய சட்டம், தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. - ஜான் பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை