உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு வழக்கறிஞர்கள் சந்திப்பு கூட்டம்

மத்திய அரசு வழக்கறிஞர்கள் சந்திப்பு கூட்டம்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்திற்கான மத்திய அரசு வழக்கறிஞர்கள் சந்திப்பு கூட்டம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் சென்னையில் நடந்தது.மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.இதில் உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு தனி அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ