டிஜிலாக்கர் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் யு.பி.எஸ்.சி., தலைவர் அஜய்குமார் கூறியதாவது: யு.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடு என்பதற்கு இடமில்லை. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக செயல்பட்ட பூஜா கேத்கர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர், மாற்றுத்திறனாளி, ஓ.பி.சி., சான்றிதழ்களில் முறைகேட்டில் ஈடுபட்டார். இனி வரும் நாட்களில், 'டிஜிலாக்கர்' வழியே சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.