உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மைய தலைவர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்( மணிக்கு 30 கி.மீ., முதல் 40 கி.மீ., வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று( மே10)கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.நாளை( மே 11) நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களிலும்,மே 12 ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களிலும்மே 13 நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்மே 14ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

மே 10 முதல் 14 வரை அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் 2-3 டிகிரிசெல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும்

சென்னையில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்றைய மழைப்பொழிவு!

சோத்துப்பாறை -13 செ.மீ.,பெரியகுளம் -9 செ.மீ.,பேரையூர் -9 செ.மீ.,வத்திராயிருப்பு- 9 செ.மீ.,மஞ்சளாறு -6 செ.மீ.,வால்பாறை- 6 செ.மீ.,பெருஞ்சாணி- 6 செ.மீ.,புத்தன் அணை- 5 செ.மீ.,பெரியாறு -5 செ.மீ.,ஸ்ரீவில்லிபுத்துார்- 5 செ.மீ.,கொடிவேரி -5 செ.மீ.,கீழ்கோத்தகிரி- 5 செ.மீ.,வட்டமலை திருப்பூர்- 4 செ.மீ.,கவுந்தப்பாடி- 4 செ.மீ.,ராஜபாளையம்- 4 செ.மீ.,நம்பியூர்- 3 செ.மீ.,கொடைக்கானல்- 3 செ.மீ.,முக்கடல் அணை- 3 செ.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ