சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.பெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ng14oacn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கனமழைக்கு வாய்ப்பு
* விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மிதமான மழைக்கு வாய்ப்பு
* கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.