உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.,31) முதல் ஜன., 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.,31) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதேபோல், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.,31) முதல் ஜன., 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MARI KUMAR
டிச 31, 2024 15:55

வானிலை மையம் கணிப்பு சில முறை தவறி விடுகிறது


Rafiq Ahamed
டிச 31, 2024 15:44

இன்று இரவு 12 மணி உடன் சென்னை யை இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றும் பணி முடிந்தது... நன்றி வணக்கம்


sundarsvpr
டிச 31, 2024 14:59

இந்த ஆண்டு போதிய மழை வானம் வழங்கியுள்ளது. மக்களுக்கு அரசு தெளிவுபடுத்தவேண்டும் எவ்வளவு மழை பொழிந்துள்ளது. கடலில் போய் சேர்ந்த மழை எவ்வளவு? கடலில் சேரும் என்று அறிந்தும் இதனை ஏன் தடுத்திட அரசால் முடியவில்லை? ரோடுகளை உயர்த்துவதால் வீடுகளில் நீர் புகுந்துள்ளது என்பதனை அரசால் மறுக்கமுடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை