உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. நேற்று, தமிழகத்தில் பரவலாக மிதமான மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மாலை திடீரென திரண்ட மேகக் கூட்டங்கள் மற்றும் மேற்கு திசை காற்றின் தாக்கத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில், 6 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், 4 செ.மீ., வரை மழை பதிவானது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை