உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு

நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு

சென்னை: நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக படத்தின் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆவண பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டது.நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, ஆவணப்படமாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து 2024ல் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இதில் நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. தன் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.இதற்கிடையே அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் நஷ்டஈடு வழக்கு உள்ள நிலையில், மேலும் ஒரு நஷ்டஈடு வழக்கு வந்துள்ளதால், நயன்தாரா தரப்புக்கு தலைவலி அதிகமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
ஜூலை 07, 2025 22:15

பஞ்சாயத்து பாலிடாயில் வரை போகுமோ? போனால் அது நூறுகோடி வாங்கிவிடுமே


Raghavan
ஜூலை 07, 2025 21:14

கலைஞர் கூறியதைப்போல் நாங்கள் காட்டவேண்டியதை காட்டி பெறவேண்டியதை பெற்றுவிடுவார்கள். இருக்கவே இருக்கிறார் கபில் சிபில், சிங்வி வழக்கை ஒன்றும் இல்லமால் செய்துவிடுவார்கள்.


Shekar
ஜூலை 07, 2025 17:46

சின்னவர் இருக்க பயம் ஏன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை