உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பெட்டிகளில் மாற்றம்

ரயில் பெட்டிகளில் மாற்றம்

மதுரை : கோடையில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு கீழ்காணும் ரயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏப். 13 முதல் ஷாலிமார் - நாகர்கோவில் (12660), ஏப். 16 முதல் நாகர்கோவில் - ஷாலிமார் (12659) ஆகிய ரயில்களின் பெட்டிகள் அதிக பாதுகாப்புள்ள 'எல்.எச்.பி.,' பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படவுள்ளன.இவ்விரு ரயில்களும் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 7 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படும்.மண்டபம் - எழும்பூர் - மண்டபம் (16751/16752), மதுரை - திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' (16343/16344) ஆகிய ரயில்களில் ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இந்த மாற்றம் ரயில் எண் 16344, 16752ல் பிப். 10 முதல், 16343, 16751ல் பிப். 11 முதல் நடைமுறைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை