உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு

டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு

புதுடில்லி, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், கொள்முதல், விற்பனை போன்றவற்றின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை ஆரம்பத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையில் இருந்து தாமாக விலகுவதாக அறிவித்தது. பின், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வு, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை, வரும் 8ல் நடக்கும் என்று அறிவித்தனர். ஆனால், அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ராஜசேகரின் சகோதரர், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் வழக்கறிஞராக ஆஜராவதால், நீதிபதி ராஜசேகர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க சம்பந்தப்பட்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் முறையிட்டனர். வழக்கை விசாரிக்கும் எம்.எஸ்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்விலேயே முறையிடுமாறு, தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.இதற்கிடையில் திடீர் திருப்பமாக, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தமிழக அரசு நேற்று தாக்கல் செய்தது. அதில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.'அரசியல் சாசனப்பிரிவு, 139ஏ கீழ், ஒரு வழக்கை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி நேற்று கோரிக்கை வைத்தார்.'அடுத்த வாரம், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால், அதற்கு முன் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த தலைமை நீதிபதி, 'விரைவாக விசாரணைக்கு பட்டியலிடப்படும்' என்று தெரிவித்தார்.ஒரு மாநில அரசே, தன் மாநில உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, இதுவரை கோரிக்கை வைத்தது இல்லை; அதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றதும் இல்லை; கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோன்ற விசித்திரத்தை பார்த்ததும் இல்லை என்று, மூத்த வழக்கறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.அரசு நிறுவனத்தில் நடந்த சோதனை தொடர்பான ஒரு வழக்கை, அரசே வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோருவதன் வாயிலாக, தற்போது வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தை குறைகூறுவது போல ஆகாதா என்றும், அதற்கான பின்னணி என்ன என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருப்பதாகவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

JAYAKUMAR V
ஏப் 08, 2025 19:43

அரசு. நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியுமா ? அவர்களும் கவர்னர்கள் போலீ நேரடியாக மக்களால் நியமிக்கவில்லை. Dance of democracy


JAYAKUMAR V
ஏப் 08, 2025 19:37

Collegium is questioned?


vinoth kumar
ஏப் 06, 2025 06:55

உ பி கூட்டத்தின் வழக்கை உ. பி. க்கு மாத்திடப்போறாங்க , மொட்டை சாமி தி மு க வுக்கு ஆப்பு வச்சுடுவான்.


naranam
ஏப் 05, 2025 22:57

ஊழல் செய்ய உதவி பண்ணுங்கன்னு கொஞ்சம் கூட பயமே இல்லாம கேக்கறாங்க.. இவனுங்களத் தான் நாம மறுபடியும் தேர்ந்தெடுக்கப் போறோமா? சிந்தியுங்கள் மக்களே..


RAAJ68
ஏப் 05, 2025 22:28

காலம் கடத்துவதற்கான வழியை தேடுகிறார்கள். வேறு மாநிலத்திற்கு மாற்றினால் அங்குள்ள நீதிபதிகளை மிரட்டி சாதகமாக தீர்ப்பு வாங்கலாம் என்ற நினைப்பு. வேறு மாநிலம் என்றால் பிஜேபி ஆளும் மாநிலமாக இருக்க வேண்டும் ஒன்று குஜராத் அல்லது உத்தர பிரதேஷ். தெலுங்கானா கர்நாடகா காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இவர்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆந்திரக்காரனை நம்ப முடியாது தெலுங்கில் பேசி நாயுடுவை பயமுறுத்தி பணிய வைப்பார்கள். பாண்டிச்சேரி கூடாது ஏனென்றால் பக்கத்திலேயே உள்ளது தினமும் மிரட்டுவார்கள்.


ram
ஏப் 05, 2025 20:28

ஒரு பழமொழி... நல்லமாடு உள்ளூரிலே விலைபோகும்.


SIVA
ஏப் 05, 2025 14:53

இந்த வழக்கு போட்டதே இவர்கள் தான் , வழக்கு போட்ட போது நம்பிக்கை இருந்தது , இப்போது இல்லையா , தவிட்டு திராவிட மாடல் அரசுகே தமிழக உயர் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா , இந்த வழக்கு ஈ டி க்கு அதிகாரம் இல்லை என்று தாக்கல் செய்ய பட்டது , இபோது தமிழக உயர் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று வந்து உள்ளது , வேறு எந்த வழக்குக்கும் இது போன்ற காரணங்கள் யாரும் இன்று வரை கூறியது இல்லை , தவிட்டு திராவிட மாடலின் கடந்த பத்து நாள் வேகத்தை பாருங்கள் முதலில் நடைமுறைக்கு வராத தமிழகத்திற்கு எம் பி கள் குறைப்பு என்று இல்லாத பிரச்சனைக்கு அணைத்து கட்சி கூட்டம் , சட்டமன்ற தீர்மானம் , இல்லாத ஹிந்தி மொழி எதிர்ப்பு , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட கட்ச தீவுக்கு இன்று அதை திரும்ப பெற வேண்டும், மீண்டும் நீட் தேர்வு எதிர்ப்பு , வக்பு வாரிய சட்ட மசாதா எதிர்ப்பு இவை அனைத்துக்கும் கடிதம் , அணைத்து கட்சி கூட்டம் , சட்ட சபை தீர்மானம் , வக்பு வாரிய சட்டத்தை எதித்து உச்ச நீதி மன்றம் செல்லும் இந்த தவிட்டு திராவிட மாடல் மற்ற விஷயங்களுக்கு ஏன் உச்ச நீதி மன்றம் செல்லவில்லை , கடந்த ஆண்டு ஈ டி க்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று சவால் விட்டவர்கள் விசாரணையை எதிர் கொள்ள வேண்டியது தானே , இந்த வழக்கு மற்ற மாநிலங்களை போன்று துணை முதல்வர் , முதல்வர் கைது வரை செல்லலாம் ,இதனால் ஆட்சிக்கு சிக்கல் வரலாம் , அப்படி வந்தால் மேலே ஐந்து காரணாங்களுக்காகத்தான் ஈ டி வழக்கு போட்டது இது பழி வாங்கும் நடவடிக்கை , பொய் வழக்கு என்று சொல்லவே இந்த போராட்டங்கள் , இலங்கையில் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்கள் அழிக்கப்பட்டன . தமிழ் இனம் அழிக்கப்பட்டது , ராஜபட்சேய் சொல்கின்றார் இந்த போரை இந்தியாவுக்காக நாங்கள் நடத்தினோம் என்று , இவ்வளுவுக்கு பிறகும் இந்த தவிட்டு திராவிட மாடல் உங்களுக்கு நன்மை செய்யும் நீங்கள் நம்பி அதனிடம் ஆட்சியை கொடுத்து இருக்கின்றிர்கள் உங்களை சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மொழியில் தான் திட்ட தோன்றுகின்றது ...


Sridhar
ஏப் 05, 2025 15:39

"தவிட்டு" "தவிட்டு"னு சொல்லி ஏங்க தவுடோட மாண்மைய கேவலப்படுத்துறீங்க? நேரடியா திருட்டு கும்பல்னு சொல்லவேண்டியதுதானே?


Sridhar
ஏப் 05, 2025 14:08

அங்குள்ள நீதிபதிகளுக்கு கொஞ்சமேனும் நியாய சிந்தனைகள் இருந்தால், இந்த மனுவின் உள்நோக்கத்தை உடனே புரிந்துகொள்வார்கள். அவ்வளவு பெரிய கொள்ளை நடந்துருக்கும்போது ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் திருட்டு கும்பலின் அதிசயமான மூளையை பாராட்டியே தீரவேண்டும். ஒரு குற்றத்திற்க்கான தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதி வைத்திருப்பார்கள் போல.


Rengaraj
ஏப் 05, 2025 12:37

எந்த ஒரு மாநில அரசு , எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் , மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் அவை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பாரபட்சம் எதுவும் இருக்காது என்று மக்களுக்கு நீதித்துறை மேல் நம்பிக்கை வரும். தற்போதோ அப்படியில்லை. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் தலையீடு இருக்கிறது என்ற சந்தேகம் தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில்பாலாஜி ஆகியோரின் வழக்குகளை இருந்து நாம் காண இயலும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்றால் உச்சநீதிமன்றம்தான் இந்தமாதிரி வழக்குகளை கையாள வேண்டும்.


M S RAGHUNATHAN
ஏப் 05, 2025 11:54

If the SC chooses to hear the case and if it finds no merit in the application, the SC should impose heavy fine to the tune of Rs 10 crores at least for wasting the precious time of Supreme Court and thus would work as a warning to the State Government that it can not take the SC for a ride.


sridhar
ஏப் 05, 2025 13:51

What an idea Who will pay the fine ? Only the state govt from its exchequer


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை