உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.எச்.பி., மணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

வி.எச்.பி., மணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்., மணியன் மீது, நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை தி.நகரில், கடந்த 2023ம் ஆண்டு செப்.,13ல் நடந்த நிகழ்ச்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசுகையில், அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து கருத்து தெரிவித்தார். அப்பேச்சு அவதுாறாக இருப்பதாக மாம்பலம் போலீசில், வி.சி., பிரமுகர் செல்வம் புகார் அளித்தார். உடனே, வழக்குப் பதிவு செய்து, மணியனை போலீசார் கைது செய்தனர். பின் அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரி, மணியன் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராகும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மணியனிடம், குற்றச்சாட்டுகள் படிக்கப் பட்டன. உடனே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இருந்தபோதும், மணியன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், ஆக. 14க்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி