உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வழக்கு: 3 வது நீதிபதியாக ஜெயசந்திரன் நியமனம்

சவுக்கு சங்கர் வழக்கு: 3 வது நீதிபதியாக ஜெயசந்திரன் நியமனம்

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளதையடுத்து மூன்றாவது நீதிபதியாக ஜெயசந்திரன் என்பவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் கமிஷனர் கடந்த மே 12ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்..கடந்த மே 23ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் 'சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன் கூறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குண்டாசை ரத்து செய்தார். மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜி, 'வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று வெளியான செய்தியில், மூன்றாவது நீதிபதியாக ஜெயசந்திரன் பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

konanki
ஜூன் 04, 2024 00:02

ஓரு வேளை சவுக்கு சங்கர் வைக்கும் குற்றச்சாட்டு அதாவது அவர் கை உடைந்தது நீதி மன்ற காவலில் என்றால் அதற்கு யார் பொறுப்பு??? இந்த சந்தேகத்தை தீர்க்கவே ஓரு விசாரணை நடத்த வேண்டும் போல இருக்கிறதே??


Dharmavaan
ஜூன் 03, 2024 23:34

கை உடைத்ததற்கு நிவாரணம் அந்த சிறை அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும் திமிர் பிடித்தவன்கள் குண்டாசை ரத்து செய்ய வேண்டும் பேச்சு சுதந்திரத்தை கோர்ட் தடை செய்ய கூடாது


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 22:29

தீம்காவுக்கு எதிராக கருத்து சொன்னால் என்னவாகும் என்பதை சவுக்குக்கு நேர்ந்த கையுடைப்பே நல்ல உதாரணம். நீதித்துறை இதை கையாண்ட விதமும் மகா மோசமானது. நீதிமன்ற காவலில் ஒருவர் கை உடைக்கப்படுகிறது என்றால் நீதிமன்றம் பொறுப்பேற்க வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ