உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செக்போஸ்ட் இருந்தும் பயனில்லை; தமிழகத்தில் குவியும் கேரள கழிவுகள்!

செக்போஸ்ட் இருந்தும் பயனில்லை; தமிழகத்தில் குவியும் கேரள கழிவுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள், மருந்து பொருட்கள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து திருநெல்வேலி அருகே வீசப்பட்டுள்ளன.திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், கனிம வளங்கள், பால் அத்தியாவசிய பொருட்கள் சிமெண்ட் போன்றவை அனுப்பப்படுகின்றன. ஆனால் கேரளாவிலிருந்து திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். நேற்று திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர் பகுதியில் ஒரு குளம் முழுவதும் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தானம் கூறுகையில், இரவு நேரம் தென்காசி வழியே வரும் லாரிகள் சீதபற்பநல்லூர் பகுதியில் வலது புறம் திரும்பி நடுக்கல்லூர் வட்டாரங்களில் குளங்களில் கொட்டி செல்கின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் உள்ள ஆலைகளுக்கு சரக்குகளை ஏற்ற கேரளாவில் இருந்து வரும்போது இத்தகைய கழிவுகளை ஏற்றி வருகின்றனர். இந்த கழிவுகளில் அனைத்தும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் பொருட்களாகும். எனவே இதனை செங்கோட்டை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.கேரளாவின் உயிர் மருத்துவம், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், குறிப்பாக திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் (ஆர்சிசி) மற்றும் க்ரெடன்ஸ் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து, கொடகநல்லூர் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டுள்ளது.நிலத்தின் மேற்பார்வையாளர் சந்தானம், முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு மற்றும் சுத்தமல்லி காவல்துறைக்கு அளித்த புகார்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறினார். பயோமெடிக்கல் கழிவுகளால் மாசுபட்ட தண்ணீரை குடித்து, கால்நடைகள் கழிவுகளை சாப்பிட்டு நோய்வாய்ப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
டிச 17, 2024 08:26

அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கே கவலை/ஆட்சேபனை இல்லை என்றால் நாம் புலம்பி என்ன பயன்? முப்பதாண்டுகளாக இந்த அட்டூழியம் நடக்கிறது....


Pandi Muni
டிச 17, 2024 07:32

கழிவை ஏற்றி வரும் வாகனங்களை தீயிட்டு கொளுத்துங்க சரியாயிடும்


sankaranarayanan
டிச 17, 2024 07:20

கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள், மருந்து பொருட்கள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து திருநெல்வேலி அருகே வீசப்பட்டுள்ளன. இதே ஒன்று கோவை அருகிலும் நடத்தப்பட்டு வருகின்றது அவைகளை தமிழக அரசாங்கம் கண்டு கொள்வதே கிடையாது அதற்குப்பதில் இங்கிருந்து கேரளாவிற்கு கனிம தாதுக்கள் லாரி லாரியாக செல்கின்றன அங்கே சென்று சிலை திறக்கும்போது அவர்களது கழிவுப்பொருட்களைப் பற்றி பேசவில்லையா அல்லது அதை தடுத்து நிறுத்த முடியவில்லையா


Sankare Eswar
டிச 17, 2024 06:42

திருட்டுவிடிய மாடல் ஆட்சியில் இதுவும் ஒரு சாதனை.. சீமான் சொல்வது சரியாகவே படுகிறது.. கேரளா திருட்டு பயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அவன் கழிவை அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அவன் ஒரு நல்ல .....................


Rajmohan
டிச 17, 2024 06:20

இதை செய்ய அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது திருட்டு திமுக அரசு. அந்த பகுதி மக்கள் கொஞ்சமேனும் ரோசம் இருந்தால் இந்த திருட்டு திமுகவை தேர்தலில் புறக்கணியுங்கள் பார்க்கலாம்..அதற்கு திராணி இல்லாத மக்கள்..


Kasimani Baskaran
டிச 17, 2024 06:00

தமிழகத்தில் ஊழல் போஸ்டர்களை வைத்துக்கொண்டு அச்சன்களை நினைத்தால் திகிலாக இருக்கிறது. பொதுமக்களாக இவர்கள் பார்த்து டின் கட்டினால் அடுத்து கழிவுகளை கொட்ட பயப்படுவார்கள்.


Kasimani Baskaran
டிச 17, 2024 06:00

தமிழகத்தில் ஊழல் போஸ்டர்களை வைத்துக்கொண்டு அச்சன்களை நினைத்தால் திகிலாக இருக்கிறது. பொதுமக்களாக இவர்கள் பார்த்து டின் கட்டினால் அடுத்து கழிவுகளை கொட்ட பயப்படுவார்கள்.


Shanmuga Sundaram
டிச 17, 2024 05:42

மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்களா?


M Ramachandran
டிச 17, 2024 04:11

உறக்கத்தில் தூங்கும் குறட்டை விட்டு பொய் தூக்கத்தில் இருக்கும் அரசு.


Nandakumar Naidu.
டிச 17, 2024 00:59

அது செக்போஸ்ட் இல்லை, ஊழல் போஸ்ட். அதிகாரிகளுக்கு சிறிதும் நம் தமிழகம் என்ற பக்தி(தேச பக்தி) இல்லை.


புதிய வீடியோ