உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்பரம்பாக்கம் ஏரியில் 3,500 கனஅடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் 3,500 கனஅடி நீர் திறப்பு!

சென்னை: கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ol5mn58&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாத்​தனூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்கத் தொடங்​கியது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.50 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இந்நிலையில், 'சாத்தனூர் அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும்' என வருவாய் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்!

கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 3,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மொத்த உயரம்:24 அடிமொத்த கொள்ளளவு: 3645 மில்லியன் கன அடிநீர்வரத்து: வினாடிக்கு 713 கன அடிநீர் வெளியேற்றப்படும் அளவு- 134 கன அடிதற்போதைய நீர்மட்டம்: 22 அடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R S BALA
டிச 12, 2024 14:43

ஜனவரி இறுதிக்குள் 50 அடி கீழ் வந்துவிடும், சந்தாஷமுங்க.


KRISHNAN R
டிச 12, 2024 13:33

என்ன இப்ப.. நடு ராத்திரி போதும்


sundarsvpr
டிச 12, 2024 09:52

எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தன. இது ஒரு நீர் தேக்கம் தானே? ஏன் மூடினோம் என்பதனை வருங்காலம் நம்மை நிந்திக்கும். கடலில் நீர் சேர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் நிலப்பகுதி மறையும் ஆக்கபூர்வ அறிவியல் பிரகாசப்படுத்தவேண்டும். வீடுகளில் மாடு ஆடு வளர்ப்பு இல்லாமையால் சுத்தமான ருசியான பால் கிடைப்பது அரிதாகிவிட்டது.


அப்பாவி
டிச 12, 2024 10:56

ஓ கெணறா... அதை மூடி மேலே ஒரு ரூம், டாய்லட் கட்டி மாசம் 10000 ரூவாய்க்கு வாடகைக்கு உட்டாச்சு


கனோஜ் ஆங்ரே
டிச 12, 2024 12:21

கடந்த ஆண்டு ஒரு பழைய வீடு வாங்கினேன்.. அதில் கிணறு 40 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டியது, சிறிய பிள்ளையார்கோவில் இருந்தது. கிணறு மற்றும் பிள்ளையார்கோவிலை மட்டும் விட்டு விட்டு... புதிய வீடு கட்டுகிறேன்... கிணற்றினால் எனக்கு ஒரு 100 சதுர அடி இழப்புதான்.. அக்கிணற்றில் மே, ஜூனில் தரையிலிருந்து பத்தடியில் தண்ணீர் இருந்தது. அதனை என் வீட்டிற்காக வைத்துக் கொண்டேன்... போர் போடாமல் வீடு கட்டி வருகிறேன்.


Srinivasan Krishnamoorthi
டிச 12, 2024 09:46

சாத்தனுர் அணையில் வினாடிக்கு ஐந்து முதல் பதினைந்து ஆயிரம் கண அடி வரை இப்போது நீர் வெளியேற்றலாம். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஐந்து முதல் பத்து ஆயிரம் கண அடி வரை இப்போது நீர் வெளியேற்றியாக வேண்டும்.


அப்பாவி
டிச 12, 2024 09:33

முதல்ல அண்ணாமலைக்கும், இ.இ.எஸ் சுக்கும் எச்சரிக்கையை அனுப்புச்சுருங்க. இல்லேன்னா.


Bhaskaran
டிச 12, 2024 08:54

தண்ணீர் லாரிகாரங்க கிட்டே kaasu வாங்கி அந்த நீரை நிரம்பாமல் செய்யும் அயோக்கியர்கள் இருக்காங்க


சமீபத்திய செய்தி