உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மணி நேரத்தில் 8 மடங்கு உயர்வு! ஜெட் வேகத்தில் எகிறிய செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து

4 மணி நேரத்தில் 8 மடங்கு உயர்வு! ஜெட் வேகத்தில் எகிறிய செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெஞ்சல் புயல் மழையால் சென்னை செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்ய தொடங்கிய மழை இன்னமும் ஓயவில்லை. விடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. தாழ்வான குடியிருப்புகளுக்கும் வெள்ளநீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பணியில் உள்ளனர். தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் அவர்கள் கறம் இறங்கி இருக்கின்றனர். இந்நிலையில் மழை விடாது பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து உயரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது.இன்று (நவ.30) காலை 449 கன அடியாக இருந்த நீர்வரத்து நண்பகல் நிலவரப்படி 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,313 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு இருக்கிறது. ஏரியின் ஒட்டு மொத்த உயரமான 24 அடியில் நீர்மட்டம் 18.82 அடியாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக 4 மணி நேரத்தில் எட்டு மடங்காக நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
நவ 30, 2024 16:48

தண்ணீர் டேங்கர் காரர்களிடம் கையூட்டு வாங்கிகொண்டு நீர்நிலைகளை சரிவர பராமரிப்பு செய்யாத அதிகாரிகள் குடும்பத்துடன் எரிநரகம் போவனுக


Ramesh Sargam
நவ 30, 2024 13:31

ஏரிகளை சரியாக பராமரிக்கவில்லையென்றால் வெள்ள அபாயம் அதிகம் இருக்கும். அதுபோன்ற பராமரிப்புக்களை அரசு வொவொருவருடமும் செய்யவேண்டும். கோடிகளில் பல தேவை இல்லாத செயல்களுக்கு நிதி ஒதுக்குவதை இனியாவது நிறுத்திவிட்டு, இதுபோன்று பராமரிப்புகளுக்கு அந்த நிதியை உபயோகப்படுத்தி மக்களை பேரிடலிருந்து காப்பாற்றவேண்டியது அரசின் தலையாய கடமை.


Mohammad ali
நவ 30, 2024 13:03

இன்னிக்கி கிளைமாக்ஸ் தாண்டி


SIVA ANANDHAN
நவ 30, 2024 12:33

ரெட்டை ஏரியில் மற்றும் கால்வாய்களில் ஆகாய தாமரைகளை அகற்றவில்லை .தாமரையை மலரவிடாத அக்கரையில் நூறில் ஒரு பங்கு ஆகாய தாமரை மீது காட்டலாமே


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 16:10

தாமரை ன்னாலே பிரச்சனை தான். ஏரிகள் நிரம்பினாலும் எதுவும் ஆகாது. பெருமாள் பாத்துப்பார்.


சமீபத்திய செய்தி