உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்; செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்; செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் அல்லாது காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன.இந் நிலையில், இடைவிடாத மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 100 அடி நீர் வீதம் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் மாலையில் 1800 கனஅடியாக காணப்பட்டது.தற்போது, ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 1800 கன அடியில் இருநது இன்று (அக்.22) காலை நிலவரப்படி 2170 கன அடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2815 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மழை மேலும் நீடிக்கும் என்பதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:45

இவரை நம்பி எப்படி தமிழக முதல்வர் ஆக்குவார்கள்


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:27

எப்போதும் DMK வந்தால் தான் ஏதாவது தீர்வுக்கு முயல்கிறார்கள் அனால் ADMK 10 வருட ஆட்சியில் மழை நீர் வடிய ஒன்றுமே செய்யாமல், ஒன்றியத்திற்கு கப்பம் கட்டி காலம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டார்கள், எப்போதும் களத்தில் நிற்பது கழகம் தான், எல்லா மாநில டபுள் என்ஜின் சர்க்கார் என்று பணத்தை வாரி இறைத்தும் கார்கள் ஏரோபிலியன் எல்லாம் மிதந்து தான் மிச்சம், உடனே 4000 கோடி இது ஒன்றிய அரசு கொடுக்கவில்லை, worldbank கடன் வாங்கி செயலாவே சென்னை தப்பித்து கொண்டு வருகிறது


ஆரூர் ரங்
அக் 22, 2025 14:30

காவிரி பெரியார் வழக்குகளில் திமுக வின் சாதனைகளை எழுத ஒரு பக்கம் போடலாம். சென்ற ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் வடியாததால் நாள் முழுவதும் விமானங்கள் ரத்து. அடையாறு ஆற்றில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. மீண்டும் பேக்கேஜ் போட்டு சாப்பிட்டு விட்டார்கள் போல. மீண்டும் செம்பரம்பாக்கம் நீர் திறந்துவிடப் பட்டுள்ளது பயமுறுத்துகிறது.


திகழ்ஓவியன்
அக் 22, 2025 18:34

பெரியவரே பெரு மழை , ஏன் இங்கு PICKERING டொரோண்டோ எல்லாம் போன வருடம் மழை , கார் முழுவதும் தண்ணீர் நின்றது , மழை பெய்தால் தண்ணீர் நிற்க தான் சேயும் , உடனே வடியாது இங்கே அப்படிதான்


கோட்டையன்
அக் 22, 2025 21:11

ஆமாம் மேற் கூறிய மூன்று கருத்துகளுக்கும் செய்திக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையே! ஒருவேளை கண் கட்டி ஓவியரா இருப்பாரோ?


M. PALANIAPPAN, KERALA
அக் 22, 2025 11:58

எல்லா வருடமும் சென்னை மாநகரத்திற்கு இது ஒரு தலைவேதணை, மழை கொஞ்சம் அதிகமாக பெய்தால் தண்ணீர் வெளியேற வழி இல்லை இதுதான் சிங்கார சென்னை


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:22

உன்னை போன்று கேரளா இன்னும் எல்லாம் மாநிலங்களில் இருந்து வாழ வக்கற்றவர்கள் அதிகம் ஆவதால் வந்த வினை இது அன்றி வந்தேறிகள் வேறு , வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்


ஜெகதீசன்
அக் 22, 2025 10:33

கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், திட்டமிடல் இன்றி ரியல் எஸ்டேட் முதலாளிக்கு ஆதரவாக செயல்படுவது, வேறு நகரங்களை முன்னேற்றாதது, திட்டமிட்ட துணை நகரங்களை உருவாக்காதது, எதிர்பார்த்த அளவை விட அதிகமாக கடல் மட்டம் கூடியது, காட்டுபள்ளி காமராஜ் துறைமுகம், மெரினா அருகே வரை சென்னை துறைமுக விரிவாக்கம், நதிகளின் முகத்துவார பகுதியில் இருக்கும் மணல் மேடு, இன்னும் பல காரணங்களால் ஓரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மழை நீர் வடியாது, அது சாத்தியமில்லை. தொடர் கன மழையில் நீர் தங்கி சென்னை மக்கள் அவதிப்படுவது மாறாது.


புதிய வீடியோ