உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

சென்னை: பாலியல் புகாரில் கைதான ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை அண்ணா பல்கலை. மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gv3ychvz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட புலனாய்வுக் குழு நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த புலனாய்வுக்குழு தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.இதையடுத்து, ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையின் போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sridhar
ஜன 22, 2025 14:36

இவன் இவ்வளவு நாள் உயிரோட இருக்கிறதே ஒரு ஆச்சரியம்தான் இவன் வாயிலிருந்து உண்மைகளை வெளிவர உட்ருவோமா என்ன?


nagendhiran
ஜன 22, 2025 14:13

விடியல் நாடகம்? யாரு அந்த சார்?


Ramesh Sargam
ஜன 22, 2025 12:12

நாடகம். நம்பவேண்டாம். ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவும்.


ponssasi
ஜன 22, 2025 11:35

அண்மை செய்தி ஞானனசேகரனுடன் நெருக்கிய தொடர்பில் இருந்ததாக இரு காவல் நிலையங்கள் பணியாற்றும் அதிகாரிகள் பெயர்கள் அடிபடுகிறது. இது ஆட்சிக்கு பெரும் களங்கம் ஆகும். ஞானசேகரன் உயிருடன் இருந்து உண்மையை சொல்லவேண்டும். மருத்துவமனையில் உயிர் பிரியக்கூடாது


Yaro Oruvan
ஜன 22, 2025 11:19

அந்த சார் யாரு ? அவன் தப்பிக்கணும்னா இவன் ஸ்வாஹ


Bala
ஜன 22, 2025 07:44

தவறு செய்யும் போது வராத வலிப்பு, நெஞ்சு வலி எல்லாம் எப்படி விசாரணையின் போது மட்டும் வருகிறது. இந்த நாடகம் இன்னும் செல்லுபடி ஆகிறது வருத்தம்.


no name
ஜன 22, 2025 09:10

visaranai appadi. ivanukku ithu pathaathu. thappa panni yetha pengal vazhkayai keduthu iruppaan


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 22, 2025 09:34

அவரு வாயைத்தொறந்தா யார் அந்த சார் மாட்டிக்குவாரு. அதுக்காகத்தான் இப்போ வாய் வலி வயித்து வலி தலைவலி திருக்குவலி எல்லாத்தையும் வரவழைச்சியிருக்காங்க கூடிய சீக்கிரம் இவருக்கும் காவேரியில பை பாஸ் மாதிரி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.


MUTHU
ஜன 22, 2025 10:37

சுந்தரம். பை பாஸ் எல்லாம் கிடையாது. பையிலே பார்சல் மட்டும் தான்.


சமீபத்திய செய்தி