உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

சென்னை: சரக்கு லாரி பழுதானதால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரமாக 10 கி.மீ., தொலைவுக்கு ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாடம் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.43 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாதங்களாக இந்த பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணிகள் காரணமாக, இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று, வேகத்தடை மீது ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் பழுதாகி நின்றது. குறுகிய சாலை என்பதால் அதன் வழியே வேறு எந்த வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து முடங்க ஆரம்பித்தது. கடந்த 6 மணி நேரமாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய முயன்றனர். ஆனால் அந்த நடவடிக்கை பலன் அளிக்காமல் போகவே, சென்னை வழியாக செல்லக்கூடிய பாதை மட்டுமே ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த ஒரு வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒருவழிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருவதால் சுமார் 10 கி.மீ., வரை வாகனங்கள் சாலையில் வரிசையாக காத்திருக்கின்றன. 6 மணி நேரம் கடந்து அங்கு போக்குவரத்து நெருக்கடி சீர் செய்யப்படாததால் மழையின் ஊடே வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கூறமுதலி
மே 20, 2025 22:19

உலகம் எவ்வளவு முன்னேறிடுச்சு... என்ன ஆட்சி பண்றீங்க !நீங்க எல்லாம் இங்கே இருந்து கண்டமிட்டு கண்டம் பாயும் மிசை ல் எல்லாம் வந்துருச்சு வீட்டில் இருந்தே எல்லாரும் வேலை செய்ய விடுங்களேன்.ஏன் இப்படி படுத்து எடுக்குறீங்க. வெள்ள வேட்டி வெள்ளை சட்டைங்களா இப்படியே உக்காந்து பிரிட்ஜ் போடுற ரோடு போடுற பில்டிங் கட்டுறேன் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு ஏன் கமிஷன் அடிச்சு இருக்கிறவங்க எல்லாம் சாவடிக்கிறீங்க ஒரே முட்டா ஒரே ரோடு நல்ல ரோடு போட கூடாதா. அப்படி அப்படி விதவிதமா ரோடு போட்டு விதவிதமா மக்கள டார்ச்சர் பண்ணி அப்படி என்ன காசு பார்க்க போறீங்க அவன் அவன் அஞ்சு லட்சம் 10 லட்சம் கொடுத்து படிச்சிட்டு டெய்லி இந்த ரோட்லயே சுத்திட்டு இருக்காங்க


K r Madheshwaran
மே 20, 2025 15:15

இந்த நிலை எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா துறைகளிலும் நிலைகளிலும் நடக்கிறது இதற்கு அரசு நிர்வாக அதிகாரிகளே காரணம் மேலும் அவர்களை சுயமாக சிந்தித்து செயல்படா வண்ணம் இந்த ஆட்சியாளர்களே காரணம் உதாரணமாக நேற்று அத்தி பள்ளி அடுத்த நிறுத்தம் முதல் ஐந்து மணி நேரமாக மழையோடு கூடிய போக்குவரத்து நெரிசல் ஓசுரில் மழை வெல்லம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஐந்து அடி அளவு மழைசாக்கடை நீர்த்தேக்கம் மக்கள் அவதி மேலும் சென்னை சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஐந்து ஆறு பாலங்கள் வேலை நடைபெறாமலேயே அரைகுரையாக நிற்கிறது இதற்கெல்லாம் அரசு ஆட்சியாளர்களே காரணம் இதையெல்லாம் கலையாமல் அவர்களுக்கு என்ன வேலை இதைவிட வேறு என்ன வேலை


சமீபத்திய செய்தி