உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் டிராபிக் நெருக்கடிக்கு புது தீர்வு! இடம் மாறும் பஸ் நிறுத்தங்கள்

சென்னையில் டிராபிக் நெருக்கடிக்கு புது தீர்வு! இடம் மாறும் பஸ் நிறுத்தங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து நெருக்கடி இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாது ஒன்று. அதிலும் தலைநகர் சென்னையை பற்றி சொல்லவே வேண்டாம் என்று சொல்லலாம். எப்போது சாலைகளில் டிராபிக் ஜாம் ஆகும் என்றே சொல்ல முடியாது.மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி. முக்கிய சாலைகள் மட்டும் அல்லாமல் குறுக்கு சாலைகளிலும் வாகனங்கள் குறுக்கும், மறுக்கும் கடப்பதை எளிதாக காணலாம். வெளியூர் செல்ல பஸ், ரயில் பயணங்களை தொடங்கும் முன்பும் இதே நெருக்கடி நிலைமைதான்.வழக்கமான நாட்களை தவிர்த்து, வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்களுக்கு முன்பும், பின்னரும் சென்னையின் வாகன நெரிசலால் அவஸ்தைபடாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக மாநகர பஸ்கள் நெரிசலில் சிக்கி தவிப்பது அன்றாட நிகழ்வே என்று சொல்லலாம். இனி இதுபோன்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றும் நடவடிக்கையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு எடுத்து, அது தொடர்பான ஆய்வையும் நடத்தி முடித்துள்ளது. குறிப்பாக சிக்னல், உயர்மட்ட மேம்பாலங்கள் அருகே உள்ள சாலைகளில் செல்லும் போதும் காணப்படும் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. ஆய்வில் சிக்னல், மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தங்களை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக பாரிமுனை-முகப்பேர், வடபழனி-தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து, சென்னையின் பல இடங்களில் விரைவில் பஸ் நிறுத்தங்கள் மாற்றப்பட உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

mukund
நவ 18, 2024 23:18

இப்ப தான் இதை பிளான் பண்ணுகிரார்களா.. .(ரமணா படத்தில் யுகி சேதுவின் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது)


அப்பாவி
நவ 18, 2024 22:55

புதுப்புது உடங்களில் ட்ராஃபிக் நெருக்கடியை உருவாக்கி அவிங்களையும் நாறடிப்போம்.


Anantharaman Srinivasan
நவ 18, 2024 20:54

பஸ் stop மாற்றம்னு சொல்லி பத்து Stopping கை எட்டாய் குறைத்து விடுவார்கள். Stag fare அதிகமாகும்.


Mani
நவ 18, 2024 20:53

வழியில் இருக்கும் விளம்பர போர்டுகளை எடுத்தாலே நிறைய இடம் கிடைக்கும். டி கடை ஹோட்டல் காரர்கள் கடை முன் ரோடில் போர்டு வைக்கிறார்கள். முக்கியமாக திரும்பும் இடங்களில் மிக அவஸ்தை. அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.


Ramesh Sargam
நவ 18, 2024 20:27

பஸ் நிறுத்தங்களை மாற்றினால் மட்டும் போதாது. பஸ் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் பஸ்ஸை சரியாக நிறுத்த அறிவுறுத்தவேண்டும். அவர்கள் எப்பொழுதும் ஒரு ஐம்பது அல்லது நூறு மீட்டர் தள்ளி பஸ்ஸை நிறுத்தி, பிரயாணிகளிள் வயிற்றெரிச்சலை கொட்டிகொள்கிறார்கள் . அவர்கள் ஓடிவந்து ஏறுவதற்குள் பஸ்ஸை நகர்த்திவிடுவார்கள்.


அப்பாவி
நவ 18, 2024 18:02

பார்க்கிங் வசதி இல்லாதவனுக்கு கார் விக்கக் கூடாது.


GMM
நவ 18, 2024 17:39

பாரீஸ் , தி. நகர், திருவல்லிக்கேணி ஹை ரோடு... போன்ற இடங்களில் நடைபாதை கடைகள் முற்றிலும் நீக்க வேண்டும். பஸ் குறைத்து வேன் , மினிபஸ் அதிகரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். இடம் மாற சாலையில் இடம் இருக்குமா ?


Prabhu
நவ 18, 2024 17:36

தனி நபர்களின் கார்கள் தான் வாகன நெரிசலுக்கு காரணம். 50 பேர் செல்ல பேருந்தை பயன்படுத்தாமல் 50 கார் பயன்படுத்துவதால் தான் நெரிசல். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அதிக ஊதியம் பெறுபவர்கள் முதற்கொண்டு சைக்கிள் , பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல பன்னாட்டு தொழிற்சாலைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் நிறுவன பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.


ram
நவ 18, 2024 17:13

கார் வைத்துஇருக்கும் அனைவரும் ரோட்டில்தான் காரை பார்க் செய்கிறார்கள். பேசாமல் சென்னை கார்பொரேஷன் ரோட்டில் பார்க் செய்யும் கார்களுக்கு வாடகை வசூலிக்கலாம், அரசுக்கு வருமானம் கிடைக்கும்.


ANANDAKANNAN K
நவ 18, 2024 17:08

நல்ல முயற்சி சென்னையில் மக்கள் தொகை அதிகம் தான், தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது இதை சரி செய்தால் நல்லது.