உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூரு, கோவைக்கு ஆம்னி! திருச்சி, மதுரைக்கு அரசு பஸ்; பயணிகள் விருப்பம் இதுதான்!

பெங்களூரு, கோவைக்கு ஆம்னி! திருச்சி, மதுரைக்கு அரசு பஸ்; பயணிகள் விருப்பம் இதுதான்!

சென்னை; திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்குச் செல்ல அரசு பஸ்களில் நிறைய பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கானோர் சென்றார். பண்டிகை காலம் முடிந்து அவரவர் வசதிக்கு ஏற்ப அரசு பஸ், ரயில்கள், ஆம்னி பஸ்களில் சென்னை திரும்பி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். அதில் குறிப்பிட்ட சில நகரங்களுக்குச் செல்ல அதிகம் பேர் அரசு பஸ்களையும், மற்ற நகரங்களுக்கு சொகுசான ஆம்னி பஸ்களையும் தேர்வு செய்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு; மலைக்கோட்டை நகரான திருச்சிக்கும், மல்லிகை நகரான மதுரைக்கும் பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களைத் தான் தேர்வு செய்திருக்கின்றனர். பெங்களூரு, கோவை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சொகுசு ஆம்னி பஸ்களை தேர்ந்தெடுத்துள்ளனர். பொங்கல் சீசனில் மட்டும் சென்னை-கோவை குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.5000 ஆக இருந்துள்ளது. ஆனால் கோவையை தவிர்த்து, மற்ற நகரங்களுக்கு செல்ல பயணிகளின் முதல் தர சாய்ஸ் அரசு பஸ்களாகத் தான் இருந்திருக்கிறது. குறிப்பாக, திருச்சி மற்றும் மதுரைக்குச் செல்ல பெரும்பான்மையானவர்கள் அரசு பஸ்களையே தேர்வு செய்து பயணித்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35,000 பயணிகள் அரசு பஸ்களை இந்த வழித்தடத்தில் தேர்ந்தெடுத்து உள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதே அதற்கு காரணம் ஆகும். ஆனால், கோவைக்கு இவற்றில் நான்கில் ஒரு பங்கு மக்களே பயணித்துள்ளனர். கடந்தாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 70 சதவீதம் பயணிகள் குளிரூட்டப்பட்ட சொகுசு ஆம்னி பஸ்களையே விரும்பி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்பது கூடுதல் தகவல். சரியான நேரத்தில் பஸ்களை இயக்குவது, பயணிகளை ஏற்றி, இறக்க தோதான இடங்களை தேர்வு செய்ததே இதுபோன்ற பஸ்களை அவர்கள் விரும்ப காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vee srikanth
ஜன 18, 2025 15:03

மன்னிக்கணும் - சென்னை - பெங்களூரு - சென்னை - இரவு நேர ரயில்கள் 2 மட்டும் உள்ளன - அதுவும் 12658 வண்டி - அநேகமாக தாமதமாக தான் கிளம்பும் - s://timesofindia.indiatimes.com/city/bengaluru/the-late-late-train-bengaluru-chennai-mail/articleshow/62227319.cms


Vijay D Ratnam
ஜன 18, 2025 15:02

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வழியாக மதுரை ஜங்க்ஷனுக்கு ஒரு நான் ஸ்டாப் ரயில் விடுங்கப்பா. வழியில் வேறு எங்கும் நிறுத்தப்படாது. மதுரை சென்று அடையும் போது கன்னியாகுமரி, ராமேஸ்வரம், செங்கோட்டை, போடிக்கு செல்வது போல கனெக்டிங் ரயில் இருப்பது போல் இருக்க வேண்டும். அதே போல ரிட்டர்ன் இருக்கவேண்டும்.


Sivagiri
ஜன 18, 2025 12:44

சென்னை பெங்களூர் - ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன - - கோவைக்கும் , ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன - கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களும் உள்ளன - கட்டணம் கம்மி - பல நேரங்களில் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட் கூட பிரீயாகதான் இருக்கும் - - - இந்த ரூட்களில் அரசு பேருந்துகள் ரொம்ப கம்மி - - ரயில்களில் ரிசர்வேஷன் பண்ணாதவர்கள் , ஆம்னி பேரூந்துகளில்தான் போக வேண்டும் , வேறு வழியில்லை . .


Sundar R
ஜன 18, 2025 12:24

நெடுந்தூரம் செல்வதற்கு யாரும் அரசு பேருந்துகளை பல பத்தாண்டுகளாக பயன்படுத்துவதில்லை. முதலாவது காரணம், பேருந்து உரிய நேரத்திற்கு சென்று சேராது என்பதை உறுதியாகச் சொல்லலாம். இரண்டாவது காரணம் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான மிக மோசமான ஹோட்டல்களில் இரவு நேரத்தில் உணவருந்துவதற்காக அரசு பேருந்துகளை நிறுத்தி விடுவார்கள். அங்கு உணவின் தரம் மிகவும் மோசமாக சாப்பிடுவதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும். இட்லி இருக்காது. தோசை வகைகள் இருக்கும். ஹோட்டல் காரர்கள் அவற்றிற்கு ஆனை விலை சொல்லி திருடர்களைப் போல் நம் பாக்கெட்டில் இருக்கும் காசு எல்லாத்தையும் வாங்கிக் கொள்வார்கள். மூன்றாவது காரணம் மழை பெய்தால், பேருந்திற்குள் மழைநீர் பயணியர்களின் தலை முழுவதையும் நனைத்து விடும். மேற்கூறிய மூன்று காரணங்களால் அரசுப் பேருந்துகளை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள்.


Natarajan Ramanathan
ஜன 18, 2025 11:50

கோவை பெங்களூரு செல்பவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள் என்பதும் திருச்சி மதுரை செல்பவர்கள் ஏழை என்பதும் தெரிகிறது.


Ganesh Kumar
ஜன 18, 2025 11:42

புதிய குளிர் சாதனப் பேருந்து இந்த ஆட்சியில் விடவே இல்லை. மக்கள் அனைவரும் ஆம்னி பேருந்தில் தான் பயணம் செய்வார்கள். இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிந்திக்க வேண்டும்


R Hariharan
ஜன 18, 2025 11:41

சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு காலை முதல் இரவு வரை பல ரயில்கள் இருக்கு. அனால் சென்னை எழும்பூ மதுரைக்கு குருவாயூர் எஸ்பி, வைகை, பாண்டியன், கன்னியாகுமாரி , தூத்துக்குடி, பொதிகை, நெல்லை, அனந்தபுரை, செந்தூர் எக்ஸ்பிரஸ் இருக்கும். அதிலும் பல ரயில்கள் இரவு ரயில்கள்தான். அதனால் டிக்கெட் கிடப்பது கஷ்டம். கூடிய சீக்கிரம் மேலும் பல ரயில்கள் விட்டால் இந்த ரூட்டெய்லாம் பல பயணிகள் ஏற வசதியாக irukkum.


Amar Akbar Antony
ஜன 18, 2025 10:20

சென்னை கோவைக்கு ஆம்னி பேருந்துகளில் வேறுவழி இல்லாமல் தான் பயணிக்க வேண்டியுள்ளது ஒன்று அரசின் பேருந்து தரம் மற்றும் அதன் சுகாதாரம் சரியில்லை மேலும் கிளாம்பாக்கம் வெகுதூரம் இவற்றை சரி செய்தலால் எல்லோரும் அரசின் பேருந்தை பயன்படுத்தலாமே முறையாக நடத்துங்கள் மக்களின் தேவைக்கேற்ப நடத்துங்கள் மற்றபடி நடத்துனர் ஓட்டுநர் சரியானவர்களே !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை