உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.300 கோடி கடன் வாங்கி சாலைகள் சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

ரூ.300 கோடி கடன் வாங்கி சாலைகள் சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை : சாலை சீரமைப்பு பணிகளுக்காக, 300 கோடி ரூபாய்க்கு கடன் வாங்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப மையம் சார்பில், 'வாட்ஸாப்' தளம் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலானவை கழிப்பறை, பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கும், புதிய கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா குறுக்கிட்டு பேசினார். அப்போது, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும், ''தனியார் வசம் ஒப்படைத்தாலும், தற்போது பணியாற்றும் ஊழியர்களை அங்கேயே பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி பொதுக்கழிப்பறை பராமரிப்பு பணியும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் கால அளவு ஒன்பது ஆண்டுகளாக உள்ளது. அதை குறைக்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் சேட்டு பேசுகையில், ''சென்னையில் துாய்மை பணி 'ராம்கி' நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சரியாக பணி செய்வதில்லை. ஆட்கள் வராமலே, வந்ததாக கணக்கு காட்டுகின்றனர். இதை கேட்டால், அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மிரட்டுகிறார்,'' என்றார்.அப்போது, 'நீங்கள் அதிக நேரம் பேசி விட்டீர்கள்' எனக்கூறி, மேயர் பிரியா மணி அடித்தார். தொடர்ந்து பேசிய கவுன்சிலர், ''என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றி மனவேதனையில் பேசுகிறேன்; நீங்கள் அமர சொல்கிறீர்கள்,'' என்றார். உடனே, மற்ற கவுன்சிலர்கள் அவரை அமரும்படியும், மைக்கை அணைக்க கோரியும் குரல் எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து தட சாலைகள், உட்புற தார் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இச்சாலை பணிகளுக்காக, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தில் 100 கோடி ரூபாய், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் 80 கோடி ரூபாய் கடனாக பெறப்பட உள்ளது.மேலும், சாலைகள் அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 120 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தம், 300 கோடி ரூபாய் கடன் மற்றும் மானியமாக பெற்று, சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி துவங்க உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலதன நிதியில் இருந்து 96 கோடி ரூபாய், சாலை சீரமைப்பு பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டல சாலைகளில், கான்கிரீட் பூந்தொட்டிகள் அமைக்க, 5.80 கோடி ரூபாய் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப மையம் சார்பில், 'வாட்ஸாப்' தளம் உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், மேயர் பிரியா கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில், 120 டாக்டர்கள் நியமிக்கப்படுவர். மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் தாமதமாக வருவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு வரும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rajakumar Ramasamy
மே 02, 2025 02:33

புதுசா போட்ட ரோடை கண்ட காரணத்தினால் தோண்டி, டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு செய்ய தேவை இல்லாமல் ஷீட் மெட்டல் கவர் செய்து பணத்தை தின்றாங்க இவனுங்க


R.Varadarajan
மே 01, 2025 16:47

கடன் வாங்குவது அர்வா சாப்பிடுவது போல


Ramesh Sargam
மே 01, 2025 12:18

கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைக்காமல் இருந்திருந்தால் இந்த கடனை வாங்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது. கடன் சுமை. அது யார் தலையில்? உங்களை தேர்ந்தெடுத்த அந்த மக்கள் தலையில். இப்பவாவது அந்த மக்களுக்கு உங்கள் தில்லுமுல்லு புரிந்தால் சரி.


Nellai tamilan
மே 01, 2025 11:45

அல்லெலுலியா பாபு சொன்னது போல் அடிச்சு விடு அடிச்சு விடு யாரு கணக்கு பார்க்க போறாங்க? எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் அப்பிடிங்கர மாதிரி தேர்தல் நெருங்க நெருங்க திராவிடியா திருடர்கள் எல்லா ரோடும் போடுவார்கள்.


xyzabc
மே 01, 2025 10:54

கடன் எதுக்கு வாங்கனும் ? ஜகத், வேலு, நேரு, 2G ராஜா, அருண், கப்பல் பாலு, பாலாஜி இப்படி எத்தனையோ பேர்வழிகள் .. இவர்களிடம் இருந்து ஏன் பணம் வாங்க கூடாது?


rajsn
மே 01, 2025 14:38

exactly... இவனுங்க தின்கிறதுக்கு நாம ஏன் கடனாளி ஆகணும்


Narasimhan
மே 01, 2025 10:48

300 கோடி இந்த அம்மா லிப்ஸ்டிக் போடவே பத்தாதே


அப்பாவி
மே 01, 2025 10:34

கையிலே காசில்லேன்னா சும்மா இருங்க. கடன் வாங்கி சாலை போடணும்னு யார் அழுவுறா? 40 பர்சண்ட் ஆட்டை மிச்சமாகும்.


vbs manian
மே 01, 2025 10:02

சொத்து வரி ஏகமாக ஏற்றி விட்டு கடன் வாங்குகிறார்கள். ஏத்துங்கள் மக்கள் தலையில் கடன் சுமையை.


Kasimani Baskaran
மே 01, 2025 08:19

கடன் வாங்கி சட்டம் பேச வசதியாக மசோதா ஒன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அது சட்டமானால் தமிழகத்தில் கடன் வாங்கிய ஒருவர் கடனை திரும்ப கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது...


Gowtham Saminathan
மே 01, 2025 07:03

300 கோடி பத்தாது... 3000 கோடி வாங்கவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை