உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கனமழை; விமானங்கள் தாமதம்!

சென்னையில் கனமழை; விமானங்கள் தாமதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நவ.15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு முழுவதும் பல பகுதிகளில் கனமழை கொட்டியது.பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றாலும் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இந் நிலையில் மழையானது விமான பயணத்தையும் தாமதப்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுடில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.ஹைதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக செல்கிறது. மழை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 12, 2024 10:57

கன மழை பெய்ததால் தண்ணீர் வீணாக போகிறது என்ற தகவல் மக்கள் விரும்பவில்லை செய்தி உண்மையா என்பதும் மலைப்பாய் இருக்கிறது. ஆனால் மாநகராட்சி செய்தி வேறுவிதமாக இருக்கிறது. கட்டடங்களை சுற்றி தேங்குகிறது என்றால் கட்டட அனுமதி வழங்கிய அரசு பொறுப்பு ஏற்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை