உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை : ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் சுரங்கப்பாதை அருகே பறக்கும் ரயில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் போது இரு தூண்களுக்கு இடையே உள்ள 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விரிவான விசாரண நடத்த தெற்கு ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Chennaivaasi
ஜன 19, 2024 10:11

இந்த திட்டம் 1987 இல் திரு எம்ஜியாரால் துவங்க பட்டது. பிறகு விரிவுபடுத்த பட்டது. சுமார் நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நிலையில் வளர்ந்து இப்போது முடிவுபெறும் நிலையில் மீண்டும் ஒரு தடங்கல். எந்த ஒரு திட்டமும் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிவு பெறாவிட்டால் அதன் பயன் ஒன்றும் இல்லை. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை உள்ள சுமார் 3 கிலோமீட்டர் வரை பாதை அமைத்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதற்க்கான முதலீடு பயன் இல்லாமல் உள்ளதுடன் கட்டுமானமும் வீணாகும் அவலம். மாநில அரசும் மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் மக்கள் பயனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு உட்புற கட்டமைப்பில் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


g.s,rajan
ஜன 19, 2024 04:25

தென்னக ரயில்வேயின் கும்பகர்ணத் தூக்கம் இப்போதாவது கலையுமா ...???


Selvakumar
ஜன 18, 2024 22:20

phase 2 metro train in 2026 year will start before this


g.s,rajan
ஜன 18, 2024 21:26

அடுத்த தலை முறைக்காவது இந்த மாடி ரயில் பாதை திட்டம் பயன்படுமா ...???


sankaranarayanan
ஜன 18, 2024 21:14

பறக்கும் பாலம் பறந்தே விட்டது இதுதான் தமிழகத்தின் தலைவிதி


அப்புசாமி
ஜன 18, 2024 20:02

யாரு அடிக்கல் நாட்டுனது? அமித்சாவா? மோடியா? இ.பி.எஸ் சா? தளவதியா?


ராம் சென்னை
ஜன 18, 2024 20:41

கலைஞர்


ஆரூர் ரங்
ஜன 18, 2024 20:01

அப்பா காலத்துல ஆரம்பிச்ச திட்டம். நம்ம பேரன் பேத்தி காலத்திலயாவது முடியுமான்னு தெரியல. கேடு கெட்ட????திருட்டு திராவிஷ ஆட்கள் அரசு நிலத்தை ஆட்டைய போட்டு கோர்ட் க்குப் போனதால வந்த 20 ஆண்டு தாமதம். இனிமே பறக்குமான்னும் புரியல. போட்ட முதலுக்கு லாபம் சாத்தியமேயில்லை. சீக்கிரம் மெட்ரோ நிர்வாகமே எடுத்து ஓட்டினால் போதும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை