உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றங்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், நீதி நிர்வாகத்தின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக கடந்த ஏப்.,15 மற்றும் 19ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பின் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த 4 நீதிபதிகள் உள்பட 7 பேரை பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.அதன்படி, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமந்த் சந்தன் கவுடர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி கிருஷ்ணன் நடராஜன் கேரள உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதிநேரனஹள்ளி ஸ்ரீனிவாசன் சஞ்சய் கவுடா குஜராத் உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி தீக்ஷித் கிருஷ்ணா ஸ்ரீபட், ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பெருகு ஸ்ரீ சதா, கர்நாடகாவுக்கும், மற்றொரு நீதிபதி சுரேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் கும்பஜடல மன்மத ராவ், கர்நாடகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balasubramanyan
ஏப் 21, 2025 16:57

So with its unlimited powers the collegium transferred judges o high ours to increase efficiency. Who will impose the same efficiency radar to Supreme Court judges. The Retd communist sympathisers judges of SC again become active and started to divide state and centre relationships and make it much strained. After retirement why they are not keeping silent and away from politics. Ex Udge Kurian Joseph lauded the judgement of SC o tamilnadu case. He said governors are not elected. If so how he got his post as judge in SC. Now he wants to have trouble in Tamilnadu politics with the tax payer money. Lot of examples can be given. Why collegiumrecommends next Chief Justice o India to President. It itself can administer oath to the chief judge and other judges.


M R Radha
ஏப் 21, 2025 15:54

அவர்களை அவர்களே நியமித்துக் கொள்வது. எந்த தேர்வு முறையும் இல்லே. சபாஷ் பேஷ் பேஷ்.