உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்ணியம், மரியாதை இருக்கணும்; மாஜி அமைச்சரை கண்டித்த ஐகோர்ட்

கண்ணியம், மரியாதை இருக்கணும்; மாஜி அமைச்சரை கண்டித்த ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விமர்சிக்கும்போது கண்ணியம், மரியாதை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார்.இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் சி.வி. சண்முகம் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இந் நிலையில் அந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது; ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணித்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை. அதில் கண்ணியம் தேவை. அடுத்த தலைமுறையினர் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.மனுதாரர் சி.வி.சண்முகம் சாதாரண நபர் போல் பேசக்கூடாது. அவர் சட்டம் படித்தவர். மாஜி அமைச்சரான அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருக்கின்றன. இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணையை நவ.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

karutthu kandhasamy
நவ 16, 2024 19:51

இதேபோல ஆண்டிமுத்து ராசா, பட்டிமன்றம் லியோனி இவர்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருக்கும்போதே விமர்சித்தார்கள். லியோனி மிக கேவலமாக விமரிசித்தார். ஆனால் நீதிமன்றங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் ???


S.L.Narasimman
நவ 15, 2024 20:10

ஆளும் கட்சியினரை விமர்சிக்கும் போது கண்ணியமாய் விமர்சிக்கனுமாம். ஆனால் அவங்க முதல்மந்திரியிலிருந்து கடைசி உபீஸ் வரை எதிர்கட்சியினரை கேவலமாய் பேசலாமாம். என்ன நியாயம் கோர்ட்டார் அவர்களே.


SUBBU,MADURAI
நவ 15, 2024 20:24

ஆனால் இந்த இரண்டு திருட்டு திராவிட பங்காளி கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் அது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.


Matt P
நவ 15, 2024 18:42

இவரு மட்டுமா சட்டம் படிச்சிருக்கார்? நாஞ்சில் சம்பத்து சீமான் வைகோவாலுச்சாமி இவங்களும் தான் படிச்சிருக்காக. சட்டம் படிப்பதே சட்டத்தை உடைப்பதற்கு தான் போல.


Nandakumar Naidu.
நவ 15, 2024 18:39

திமுக வின் ஆபாச பொறம்போக்கு பேச்சாளரை ஜாமினில் விட்டு விட்டு இவருக்கு மட்டும் என்ன அறிவுரை?


Kasimani Baskaran
நவ 15, 2024 18:32

பிரதமர் பற்றி தரக்குறைவாக பேசும் திமுக தற்குறிகளை என்ன செய்வது?


Smba
நவ 15, 2024 18:29

விடியலுக்கு ஆப்படிக்க இவர் தான் சரியன நபர்


Ramesh Sargam
நவ 15, 2024 18:15

கண்ணியம், மானம், மரியாதை தெரியாதவர்கள், அறியாதவர்கள், தொலைத்தவர்கள்தான் அரசியலில் கால் பதிக்கமுடியும் என்று எப்படி நீதிமன்றத்திற்கு தெரியாமல் போனது…


Ramesh Sargam
நவ 15, 2024 18:15

கண்ணியம், மானம், மரியாதை தெரியாதவர்கள், அறியாதவர்கள், தொலைத்தவர்கள்தான் அரசியலில் கால் பதிக்கமுடியும் என்று எப்படி நீதிமன்றத்திற்கு தெரியாமல் போனது…


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை